இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

      

66.எல்லே இலக்கம் - ஒரு விளக்கம்


முனைவர் ப. பத்மநாபன்
செயலர், செம்மொழித் தமிழாய்வுப் பேரவை, புதுச்சேரி.

முன்னுரை

தொல்காப்பியர் சொற்களின் தன்மையைப்பொறுத்து அவற்றை நான்காகப் பாகுபடுத்துகிறார். அவை பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகியவை ஆகும். அவை வழங்கும் இடங்களைப் பொறுத்து இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்றும் சொற்களை நான்காகப் பிரிக்கிறார். அவற்றுள் தன்மையைப் பொறுத்து நான்காகப் பாகுபடுத்தும் சொற்களுள் இடைச்சொல் பற்றித் தொல்காப்பியர் சொல்லதிகார இடையியலில் விளக்கிக் கூறுகிறார். தொடக்கத்தில் இடைச்சொல்லின் பொது இலக்கணத்தைக் கூறும் தொல்காப்பியர் இவையிவை இடைச்சொற்கள் எனக்கூறி அவற்றுக்கான பொருளையும் தருகிறார். அவ்வாறு வரும் சொற்களில் “ எல்“ என்ற இடைச் சொல்லின் தன்மையையும் பொருளையும் இக்கட்டுரை ஆராய்கிறது.

இடைச்சொல்லுக்கான இலக்கணம்

தொல்காப்பியர் இடைச்சொல்லுக்கான பொது இலக்கணத்தை இடையியலின் முதல் நூற்பாவில் கூறுகிறார்.

“இடையெனப் படுப பெயரொடும் வினையொடும்
நடைபெற் றியலும் தமக்கியல் பிலவே“ (தொல். சொல். இடை.1)

என்கிறார்.

“இடைச்சொற்கள் பெயரொடும் வினையொடும் சார்ந்து வந்து பொருள் பயக்கும். தனித்து வரும் தன்மை இல்லாதன“ என்பது இந்நூற்பாவின் பொருள். மொழியியலார் இதனைக் கட்டுருபன் (Bound morpheme) என்பார்.

“சொல்லுக்கு முன்னும் பின்னும் வருமாயினும் பெரும்பாலும் இடைவருதலின் இடைச் சொல்லாயிற்று“ என்கிறார் சேனாவரையர்.

தெய்வச்சிலையார் “பெயரும் வினையும் இடமாக நின்று பொருளுணர்த்தலின் இடைச் சொல்லாயிற்று“என்கிறார்.

சிவஞான முனிவர் கூறும்போது, “பொருளையும் பொருளது புடைபெயர்ச்சியையும் தம்மாலன்றித் தத்தம் குறிப்பால் உணர்த்தும் சொற்கள். பெயர்ச்சொல், வினைச்சொற்களுமாகாது அவற்றின் வேறுமாகாது இடை நிகரனவாய் நிற்றலின் இடைச்சொல் எனப்பட்டன“ என்கிறார்.

இடையியலின் இரண்டாம் நூற்பாவில் இடைச்சொற்களின் ஏழு வகைகளைத் தொல்காப்பியர் சுட்டுகிறார்.

1. இருசொற்களின் புணர்ச்சி நிலையில் பொருள் நிலைக்குத் துணையாவன, அவை சாரியைகள் ஆகும்.

2. வினைச் சொற்களில் இடம்பெறும் காலம் காட்டும் உருபுகள்.

3. வேற்றுமை உருபுகள்

4. அசை நிலைச் சொற்கள்

5. இசைநிறைச் சொற்கள்

6. தத்தம் குறிப்பால் பொருள் உணர்த்தும் சொற்கள்

7.ஒப்புமை படுத்தவரும் உவம உருபுகள். (தொல்.சொல்.இடை.2)

சொல்லதிகார இடையியலில் அசைநிலைச் சொற்கள், இசைநிறைச்சொற்கள் தத்தம் குறிப்பில் பொருளுணர்த்தும் சொற்கள் ஆகிய மூன்று சொற்களின் பொருள்களை விளக்குகிறார்.தத்தம் குறிப்பில் பொருள்செய்வன

இம்மூவகைச் சொற்களுள் முதலில் தத்தம் குறிப்பால் பொருள் உணர்த்தும் சொற்களை முதலில் விளக்குகிறார். அவ்வாறு விளக்கும் போது, பல பொருள் குறித்த இடைச்சொற்களை நான்காம் நூற்பா முதல் 12 ஆம் நூற்பா வரையிலும் ஒரு பொருள் குறித்த இடைச் சொற்களை 13ஆம் நூற்பாவிலிருந்து 21 ஆம் நூற்பா வரையிலும் விளக்குகிறார்.

“எல்“ எனும் ஒருபொருள் குறித்தஇடைச்சொல்

தொல்காப்பியர் “எல்லே இலக்கம்“ (தொல்.சொல்.இடை.21) என்கிறார்.

“எல்“என்ற சொல் இலக்கம் என்ற பொருளில் வரும் என்கிறார். இந்நூற்பாவிற்கு உரைகூறும் இளம்பூரணர், “எல்லே விளக்கம்“ எனப் பாடங் கொள்கிறார். எனவே “எல்“ என்ற சொல்லுக்குத் தொல்காப்பியர் “விளக்கம்“ எனப் பொருள் கூறுவதாகக் கருதி இந்நூற்பாவை மேற்கொண்டு விளக்காமல் எடுத்துக்காட்டை மட்டுமே தருகிறார். “ எல்வளை “எனும் புறப் பாடல் தொடரை எடுத்துக் காட்டுகிறார் (புறம் 24..9) சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார் ஆகிய மூவரும் “இலக்கம்“ என்றே பாடங் கொள்கின்றனர். ஆனால் இளம்பூரணர் இதே நூற்பாவைச் செய்யுளியல் 206 ஆம் நூற்பாவில் எடுத்துக் காட்டும் போது “எல்லே இயக்கம்“ என எடுத்துக் காட்டுகிறார். இடையியலில் “எல்லே விளக்கம்“ எனப் பாடம் கொண்ட இளம்பூரணர் “இயக்கம்“ என்ற பாடத்தைச் செய்யுளியல் 206ஆம் நூற்பாவில் எடுத்துக்காட்டியிருக்கிறார் என்பது ஐயத்திற்குரியது. ஏனெனில், ஓரிடத்தில் “விளக்கம்“ என்றும் இன்னோரிடத்தில் “இயக்கம்“ என்றும் ஒரே நூற்பாவிற்கு மாற்றிப் பொருள் கொள்ளும் போக்கை இளம்பூரணர் மேற்கொண்டிருக்க முடியாது என்றே எண்ணத் தோன்றுகிறது.

சேனாவரையர்

இந்நூற்பாவை விளக்கும் சேனாவரையர் “எல்லே இலக்கம்“ எனக் கொண்டு “எல் “ என்பது உரிச்சொல் நீர்மைத்தாயினும் ஆசிரியர் இடைச்சொல்லாக ஓதினமையான் இடைச் சொல்லென்று கோடு“ என்றுகூறி “எல்வளை(புறம் 24) என எல்லென்பது இலங்குதற் கண்வந்தவாறு” எனக்கூறுகிறார். இதேநிலை பேராசிரியரிடத்தும்உண்டு. ஆசிரியர் கூறியதனால் நண்டிற்கு நான்கறிவுண்டு எனத் தொல்காப்பியரை வழிமொழிகின்ற பேராசிரியர் “நண்டிற்கு மூக்குண்டோவெனின் அது ஆசிரியன் கூறலால் உண்டென்பது பெற்றாம்” (தொல் .பொருள்.மர.31) நண்டிற்கு மூக்குண்டா என்ற ஐயம் தனக்கு இருப்பினும் ஆசிரியர் (தொல்காப்பியர்) உண்டென்றதால் பேராசிரியர் தானும் தொல்காப்பியர் கூற்றையே ஒப்புக்கொள்கிறார்.

நச்சினார்க்கினியர்

“எல்லே இலக்கம்” எனக்கொண்டே இந்நூற்பாவிற்கு விளக்கம் கூறும் நச்சினார்க்கினியர் “இதுவுமது, (இ ள்) எல்லே யிலக்கம்., எல்லென்னுஞ்சொல் விளங்குதற் பொருண்மையை உணர்த்தும் என்றவாறு. (உ.ம்) எல்வளை எம்மொடு வரின்., எனவரும்” என்கிறார். இவ்வெடுத்துக்காட்டுப் பாடலடி கலித் தொகையில் இடம் பெறுகிறது (கலி.13)

தெய்வச்சிலையார்

தெய்வச்சிலையார் “இலக்கம்“ எனக்கொள்கிறார்.“ (இ ள்) எல் என்பது இலங்குதல் குறித்து வரும் எ.,று. உ.ம் எல்வளை (புறம்24) இலங்குவளை. இது உரிச்சொல்லன்றோவெனின் அது குறைச் சொல்லாகி நிற்கும். இது குறையின்றி நிற்றலின் இடைச் சொல்லாயிற்று” என்கிறார். சோனாவரையர் இடைச்சொல்லென்று கொண்டமையைத் தெய்வச்சிலையார் மறுக்கிறார்.எல்லே இரக்கம்

அரசன் சண்முகனார் கூறிய விளக்கம் வேறுவகையில் அமைந்துள்ளதாகப் பேராசிரியர் வெள்ளைவாரணனார் கூறுகிறார். “இலக்கம் என்னும்பொருளை உணர்த்தும் “எல்“ என்னும் லகர ஈற்று உரிச்சொல்லை நுனித்துணர்ந்து இலக்கணத்தைச் செய்த தொல்காப்பியர் இடையியலில் வைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் இரக்கப்பொருளைக் குறிக்கும் ஏகார ஈற்று இடைச்சொல்லாகிய “எல்லே “என்ற சொல்லே இடம் பெற்று “எல்லே யிரக்கம் என்றிருந்திருக்க வேண்டும். பெயர்த்தெழுதுவோர் பிறழ்ச்சியின் காரணமாக இவ்வாறு எழுதிவிட்டனர்” என அரசன் சண்முனாரின் விளக்கத்தைப் பேராசிரியர் வெள்ளைவாரணனார் குறிப்பிடுகிறார். மேற்கூறிய கருத்துகளின் வழியே நாம் நான்கு கருத்துகளைப் பெறலாம்.

1. இளம்பூரணர் “எல்” என்றஇடைச்சொல்“ விளக்கம்“ என்ற பொருளில் வரும் என்கிறார்.

2. சேனாவரையர் “எல்” என்றஇடைச்சொல் “இலக்கம்“ என்ற பொருளில் வரும் என்கிறார். “ எல்“ என்பது உரிச்சொல்லாயினும் ஆசிரியர் இடைச்சொல் என்றமையான் தானும் இடைச்சொல்லாக ஏற்றுக்கொள்வதாகக் கூறுகிறார்.

3. தெய்வச்சிலையார் “எல்” என்பதற்கு “இலக்கம்“ எனப் பொருள் கொண்டு உரிச்சொல் குறைச்சொல்லாக நிற்கும். ஆனால் “ எல்“ என்பது குறையின்றி நிற்றலின் இடைச்சொல்லாயிற்று என்கிறார்.

4. அரசன்சண்முகனார் “எல்” என்ற லகர ஈற்றுச்சொல் இடைச்சொல் அன்று. இடைச்சொல்லின் இலக்கணத்தை நன்குணர்ந்த தொல்காப்பியர் ஏகார ஈற்றுச் சொல்லாகிய “எல்லே “ என்பதைத்தான் “இரக்கம்“ என்ற பொருளில் இடைச்சொல்லாக வைத்தார் “என்கிறார்.

இலங்குதல், விளங்குதல், துலங்குதல், துளங்குதல்

இலங்குதல், விளங்குதல், துலங்குதல், துளங்குதல் ஆகிய இந்நான்கு சொற்களின் பொதுப்பொருள் ஒன்றேயாகும். நன்றாகக் கண்களுக்குப் புலப்படும்படித் தோன்றுதலாகும். ஒரு பொருள் கண்களுக்குத் தோன்றுகின்றபடி விளங்க வேண்டுமானால் அப்பொருள் இலங்கி, விளங்கி, துலங்கி, துளங்கித் தோன்ற ஒளி இன்றியமையாததாகிறது. தொல்காப்பியர் மொழியில் கூறப்புகின் கண்ணால் நுண்ணதின் உணர வேண்டுமெனில் ஒளியின் உதவியின்றி அது நிகழாது. எனவே அந்த ஒளியின் துணையால்தான் ஒருபொருள் இலங்கி, விளங்கி, துலங்கி, துளங்கித் தோன்றுகிறது. அந்த ஒளியை உலகுக்கு வழங்குவது ஞாயிறு ஆகும். உலகுக்கு ஒளி வழங்கும் ஞாயிறு இன்றேல் ஒளிஇருக்காது., உலகம் இயங்க முடியாது., உலகம் பட்டுப் போகும். உயிரினங்கள் அழிந்துபடும். எனவே “எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே“ என்ற தொல்காப்பிய நூற்பாவின் அடிப்படையில் “எல்“ எனும் சொல் ஞாயிற்றைக் குறிப்பதாகவே தொல்காப்பியர் தந்திருக்கிறார் என்பதை அறியலாம். இதற்கான அகச்சான்றைத் தொல்காப்பியரே தொல்காப்பியத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.“வைகறை விடியல் மருதம் எற்பாடு நெய்தல் ஆதல் மெய்பெறத் தோன்றும்“ (தொல்.பொருள்.அகத்.8) என்பது நூற்பா. இளம்பூரணர், நச்சர் ஆகியோரின் கருத்துப்படி இச்சொல் ஞாயிறு மறையும் நேரத்தைக் குறிக்கிறது. ஆனால் சிவஞான முனிவர் ஞாயிறு தோன்றும் நேரம் என்கிறார். எல் + படு என்பதே புணர்ச்சியிற் திரிந்து எற்படு என்றாகி படு என்பது முதனிலை திரிந்து பாடு என்ற தொழிற்பெயராகி எற்பாடு என்றானது. எனவே தொல்காப்பியர் “எல்“ என்ற சொல்லை ஞாயிற்றைக் குறிக்கும் சொல்லாகப் பொருள் கொண்டிருக்கிறார் என்பது தெளிவு. “எல்“ என்ற சொல்லுக்கு இந்தப் பொருளை மனத்தில் நிறுத்தியே தொல்காப்பியர் இடையியலில் “இலக்கம்“ அல்லது “விளக்கம்“ என்ற பொருளைத் தருகிறார். ஏனெனில் பகலவன் இன்றிக் கண்ணால் காண்கின்ற பொருள்கள் யாவும் இலக்கமாகவும் விளக்கமாகவும் தோன்றா.

சங்க இலக்கியங்களில் “எல்“

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய சங்க இலக்கியங்களில் “எல்“ என்ற இச்சொல் பரவலாகப் பயின்று வந்துள்ளது. நற்றிணையில்தான் இச்சொல் பல்வேறு பாடல்களில் பரவலாக எடுத்தாளப்படுகிறது. “எல்“ என்ற இச்சொல் நற்றிணை உட்பட சங்க இலக்கியங்களில் 72 இடங்களில் இடம்பெற்றுள்ளது. அதற்கடுத்த நிலையில் “எல்“ என்ற சொல்லின் அடிப்படையில் தோன்றிய “எல்லி“ என்ற சொல் சங்க இலக்கியங்களில் 23 இடங்களில் பயின்று வந்துள்ளது. நற்றிணையில் ஒன்பது இடங்களிலும் நெடுந்தொகையில் எட்டு இடங்களிலும் இச்சொல் பயின்று வந்துள்ளது.நற்றிணையின் அடிப்படையில்

நற்றிணையில் 23 பாடல்களில் “எல்“ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. நற்றிணையின் அடிப்டையில் காணும் போது “எல்“ என்ற சொல் “ஒளி என்ற பொருளில் 56, 68, 77, 100, 136, 152, 264 ஆகிய ஏழு பாடல்களிலும் ஒளி ஏற்பட அடிப்படைக் காரணியாக விளங்கும் “ஞாயிறு“ என்ற பொருளில் 258 ஆம் பாடலிலும் பயின்று வந்துள்ளது. அதே நேரத்தில் இப்பொருளுக்கு நேர்எதிர்ப் பொருளான “இரவு“ என்ற பொருளில் இரண்டு மற்றும் 241 ஆகிய இரண்டு பாடல்களில் பயின்று வந்துள்ளது.

“எல்“ என்ற சொல்லின் பின்னொட்டாக இகரம் சேர்ந்து லகரம் இரட்டித்து உருவான “ எல்லி“ என்ற சொல் நற்றிணையில் “இரவு“ என்றபொருளில் 41, 90, 211, 169, 191, 218 ஆகிய ஆறு பாடல்களில் பயின்று வந்துள்ளது. ஆனால் 163 ஆம் பாடலில் இடம்பெறும் “எல்லியும் இரவும் என்னாது (163.3) என்ற அடியில் இப்பொருளுக்கு நேர் எதிர்ப்பொருளான “பகற்பொழுது“ என்ற பொருளில் வருகிறது. எனவே “எல்“ என்றசொல் “ஒளி“ மற்றும் அதற்கு அடிப்படைக் காரணியாக விளங்கும் பகலவனையும் குறிக்கும் என்றும் அதே நேரத்தில் “இராப்பொழுது“ என்ற பொருளில் சிறுபான்மை அமைகிறது என்பதையும் அறிய முடிகிறது. “எல்லி“ என்ற சொல் இதற்கு நேரமாறாக அமைகிறது. அதாவது பெரும்பான்மை “இரவு“ என்ற பொருளிலும் சிறுபான்மை “பகல்“ என்றும் வருகிறது.

“எல்“ என்ற சொல்லின் தன்மைகள்

தமிழ்ச்சொற்கள் அவற்றுண்டான தன்மைகளால் நான்கு வகைகளாகப் பகுக்கப்படுகின்றன. பெயர், வினை, இடை, உரி எனும் நான்கு வகைளில் அவை பயன்படுத்தப்படுகின்றன. பெயர்ச்சொற்களும் வினைச்சொற்களும் தனித்தியங்கும் ஆற்றல் உடையன. இடைச்சொற்கள் பெயரொடும் வினையொடும் நடைபெற்றியலும்., தமக்கென இயல்பில்லாதன. உரிச்சொற்கள் இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றுவன. “எல்“ என்ற சொல் தொல்காப்பியர் காலத்திலேயே ஞாயிறு என்றபொருளில் பெயர்ச்சொல்லாகவும் (Noun) எல் வளை, எல்வளி முதலான இடங்களில் வினைச்சொல்லாகவும் (வினையின் தொகுதி அல்லது காலம் கரந்தபெயரெச்சம்) (Verb ) தனித்தே இயங்கியுள்ளது. “ எல் என்ற சொல் பெயர்நிலையில் “ஞாயிறு“ என்ற பொருளையும் வினைநிலையில் “ஒளிவிடு, ஒளிர்,விளங்கு, இலங்கு என்ற பொருளில் நன்னூலார் வாக்கில் .செய்யென் ஏவல் வினையாகவும் வழங்கி வந்திருக்கிறது. மேலும் எல்பட, எல்லிடை, எல்லூர், எல்லுற முதலான இடங்களில் தத்தம் குறிப்பில் பொருளுணர்த்தும் இடைச்சொல்லாகவும் (Bound morpheme) எல் என்ற ஒரே சொல், ஒருசொல் பலபொருட்கு உரிமை தோன்றும் பண்புச்சொல்லாகி உரிச்சொல்லாகவும் (Root morpheme) விளங்கித் திகழ்கிறது.

தொல்காப்பியர் கால இலக்கியங்களில் “எல்“ எனும் இச்சொல் தனிச் சொல்லாகவே பயன்படுத்தப்பட்டுள்ளமையால்தான் தொல்காப்பியர் “எல்“என்ற சொல்லைக் “கதிரவனைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தி இருக்கிறார். அதே நேரத்தில் ஒருசொல் தான் உணர்த்தும் பொருளுக்கு நேர் எதிரான பொருளையும் உணர்த்தும் சூழல் தொல்காப்பியர் காலத்திலேயே உண்டாகிவிட்டது. “எல்“ என்ற சொல் பகலவனையும் அதன் காரணமாக உண்டான ஒளியையும் குறித்த அதே நேரத்தில் “இருள்“ என்ற பொருளையும் ஒரே வழி உணர்த்திய நிலை சங்கஇலக்கியங்களில் காணப்படுகிறது.ன் இது போன்றே “எல்“ என்ற சொல்லோடு இகரம் பின்னொட்டாகச் சேர்ந்து“ எல்லி என்றாகி “இரவு“ என்ற பொருளையும் ஒரோவழிப் “பகல்“ என்ற பொருளை உணர்த்தும் நிலையையும் சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது.

தொல்காப்பியர் “மானம்“ என்ற சொல்லை இதே நிலையில் கையாள்கிறார். “மானம்“ என்ற சொல்லைச் “சிறுமை அல்லது குற்றம் “ என்ற பொருளில் எழுத்ததிகாரத்திலும் சொல்லதிகாரத்திலும் ஒன்பது இடங்களில் பயன்படுத்துகிறார். “வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை (தொல். எழுத்.உயிர்மயங்.28,44 மெல்லெழுத்து மிகினும் மானம் இல்லை தொல்.எழுத்.புள்ளிமயங்.28, 46) ஆனால் அதே “மானம் “என்ற சொல்லைப் “புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தலும் (தொல்.பொருள்.அகத்.41) என்ற இடத்தில் “பெருமை“ என்ற பொருளில் கையாள்கிறார்.

“ படு“ என்ற சொல்லும் இதே நிலையில் பொருள் கொள்ளப்படுகிறது. “படுதல்“என்ற சொல்லுக்கு “மறைதல்“ என்ற பொருளும் அதற்கு எதிரான “தோன்றுதல்“ என்ற பொருளும் உண்டு. இதே நிலையில் “நந்துதல்“ என்ற தொழிற்பெயருக்கு “ தேய்தல்“ என்ற பொருளும் “ வளர்தல்“ என்ற எதிர்ப் பொருளும் உண்டு. இதே நிலையைத்தான் “எல்“ என்ற பெயர்ச்சொல், தொல்காப்பியர் காலத்திலேயே பெற்றிருக்கலாம். தொல்காப்பியர் காலத்தில் தோன்றிய இலக்கியங்களிலும் இவ்வாறே பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் தொல்காப்பியர் கால இலக்கியங்கள் கிடைக்காமல் போனதால் தொல்காப்பியர் காலத்தை ஒட்டிய சான்றுகள் கிடைக்கவில்லை. ஆனால் சங்க இலக்கியங்களில் இதற்கான சான்றுகள் கிடைக்கின்றன. ஒரு சொல் தன்னுடைய தன்மையில் இவ்வாறு அடையும் மாற்றங்கள் (Semantic changes) அம்மொழியின் வளர்ச்சியில் ஒருவகை நிலை என்றே கொள்ளலாம்.

துணைநின்ற நூல்கள்

1. தொல். சொல். இளம்பூரணம்

2. தொல். சொல். சேனாவரையம்

3. தொல். சொல். தெய்வச்சிலையம்

4. க.வெள்ளைவாரணனார்., தொல்காப்பியம்- நன்னூல் சொல்லதிகாரம்

5. க. வெள்ளைவாரணனார்., தொல்காப்பியம்., வரலாறு

6. நற்றிணை

7. அகநானூறு


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s3/p66.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License