இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
கட்டுரைத் தொடர்கள்

கற்றல் - கற்பித்தல்

முனைவர் மா. தியாகராஜன்


3. பேச்சுத் தமிழை வளர்ப்பதில் பள்ளி ஆசிரியர்களின் பங்கு

முன்னுரை

இக்காலம் பேச்சு மொழியும் எழுத்து மொழியும் நன்கு வளர்ந்துள்ள காலம். இக்காலத்தில் பேசவும் எழுதவும் பழக்கமும்; பயிற்சியும் உடைய ஒருவர் எதையும் நினைத்தவுடன் காட்சிப்படுத்துகிறார். அதற்குப் பேச்சு வடிவம் தருகிறார். எழுத்து வடிவமும் தருகிறார். எனவே, சிந்தைனையும் வளர்ச்சியும் மொழி வழியாகவே நடக்கிறது. மொழி இல்லாமல் சிந்திக்க முடியாது. சிந்திப்பதற்கு மொழியே அடிப்படையாய் - அடிப்படைக் கருவியாய் இருக்கிறது. அந்த அடிப்படைக் கருவியான மொழி இரு வடிவங்களை உடையது என்பது தெளிவு. அவை பேச்சு வடிவம், எழுத்து வடிவம் ஆகும். பேச்சு வடிவம் முன்னது. எழுத்து வடிவம் பின்னது. பேச்சு வடிவம் இருந்தால்தான் எழுத்து வடிவம் சிறப்புறும். எனவே ஒரு மொழியின் பேச்சு வடிவத்தை - ஒருவர் தனது பேச்சுத் திறனை எவ்வாறு வளர்த்துக் கொள்ள இயலும் என்பதையும் பேச்சுத் தமிழில் ஒரு மாணவர் எவ்வகையில் திறன் பெறலாம் என்றும் தமிழாசிரியர் எவ்வகையில் அம்மாணவர்க்கு உதவலாம் என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

குழந்தைகளின் பேச்சு நிலைகள்

ஒரு குழந்தை மூன்றாவது மாதத்தில் புன்னகை புரியும். பிறர் குரலை உற்று நோக்கும். அ, உ என்று ஒலிக்கும்.

4-ஆவது மாதத்திலிருந்து 6-ஆவது மாதத்திற்குள் சத்தமிட்டுச் சிரிக்கும். கெக்கே பிக்கே என்று சத்தமிடும்; கூச்சலிடும்.

6-ஆவது மாதத்திலிருந்து 9-ஆவது மாதத்திற்குள் பிற ஓசைகளைத் தானும் பின்பற்ற முயலும்;. தொடர்ந்து கூச்சலிடும். நாம் பேசுவதை உற்று நோக்கித் தானும் திரும்பச் சொல்ல முனையும்.

10-ஆவது மாதத்திலிருந்து 12-ஆவது மாதத்திற்குள் வாவா, போபோ, மாமா, காகா என்று இரண்டிரண்டு எழுத்துக்களை உடைய சொற்களைச் சேர்த்துப் பேசும். கைக் கொட்டிப் பேச முயற்சி செய்யும். பெரியவர்களுடைய பேச்சுக்கு எதிர்க்குரல் கொடுக்கும்.



12-ஆவது மாதத்திலிருந்து 18-ஆவது மாதத்திற்குள் நடைமுறையில் இருக்கும் சொற்களுக்குப் பதிலாகத் தானாகச் சில சொற்களைப் பேசும். எடுத்துக்காட்டாகப் பால் வேண்டும் என்பதற்குப் பதிலாக இங்கா என்று சொல்லும். மேலும் பெரியவர்கள் பேசுவதைப் புரிந்து கொள்ளும்.

12-ஆவது மாதத்திலிருந்து 24-ஆவது மாதத்திற்குள் சிறு சிறு சொற்களை இணைத்துப் பேசும். எடுத்துக்காட்டு, இது பொம்மை. என் சட்டை, மிட்டாய் வேணும். பல வினைச் சொற்களை உச்சரிக்கும். எடுத்துக்காட்டாக, போ, வா, கொடு, தூக்கு, நட, தா. இந்த நிலையில் உச்சரிப்புகள் தெளிவாகப் புரியாமல் இருக்கும். அதே சமயம் இனிமை ததும்பும் காலத்தைத் தவறாகக் கூறும். எடுத்துக்காட்டு, நாளைக்கு நீ வந்தீயா நேத்து கொடுப்பேன். நிறையச் சொற்களைப் புதிதாக அடிக்கடி உச்சரிக்கும்.

24-ஆவது மாதத்திலிருந்து 30-ஆவது மாதத்திற்குள் சில வார்த்தைகளைத் தொடர்ந்து அடிக்கடிப் பேசும். புதிய சொற்களை நிறையப் பேசும்.

30-ஆவது மாதத்திற்குள் சில வார்த்தைகளைத் தொடர்ந்து வாக்கியங்களைப் பேச முயலும். பேசவும் செய்யும். சில வாக்கியங்களை முழுமையாகப் பேசி முடிக்கத் தெரியாது. பெரியவர்களைப் போலவே பேசுவது வியப்பாக இருக்கும்.

பார்த்துப் பழகுதல்

பெரியவர்கள் பேசுவதை, செய்வதைப் பார்த்து, கவனித்துத் தானும் செய்வது குழ்நதைகளின் மாணவர்களின் இயல்பு ஆகும். திறமை பெற்ற ஒருவரைப் பலமுறை கவனித்துக் கற்றுக் கொள்ளும்; போது அவருடைய சிந்தனை, நடவடிக்கை ஆகியன மாணவனுக்குத் தெரிய வரும். அவற்றையே தானும் கற்றுக் கொண்டு செயல்படுத்த முனைவான். எடுத்துக்காட்டாக, ஆசிரியர் பேசுவதைப் போலவே பேச முற்படுவான். பேசுவான். ஆசிரியர் எழுதுவதைப் போலவே எழுத முற்படுவான். எழுதுவான்.



எனவே ஒரு தமிழாசிரியர் தன் மனதில் ஒன்றை உறுதியாகப் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்;. அதாவது தன்னை - தன் பேச்சை மாணவன் பின்பற்றுகிறான். ஆதலால் தன்னுடைய பேச்சு, உச்சரிப்பு பேசும் முறை ஆகியன தெளிவாக இருக்க வேண்டும் என்று பதிய வைத்துக் கொண்டு பேசும் போது தெளிவும் சரியான முறையும் இருக்கும் வகையில் பேச வேண்டும். மாணவன் பேச்சுத் தமிழைச் சிறப்புறக் கையாள ஆசிரியர் ஊன்றுகோலாகவும் தூண்டுகோலாகவும் இருக்க வேண்டும்.

எழுதுதலும் பேசுதலும்

மொழி கற்றல் கற்பித்தலில் கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய நான்கு திறன்களும் இன்றியமையாத இடம் பெறுகின்றன. இவற்றுள் கேட்டலும், படித்தலும் கொள்திறன்கள் ஆகும். பேசுதலும், எழுதுதலும் ஆக்கத் திறன்கள் ஆகும். கொள்திறன்களான கேட்டலையும், படித்தலையும், உணர்திறன்களாகவும், ஆக்கத் திறன்களான பேசுதலையும், எழுதுதலையும் உணர்த்தும் திறன்களாகவும் கருதலாம்.

தொடக்கநிலை, இடைநிலை, உயர்நிலை என மூன்று நிலைகளிலும் மாணவர்கள் படித்தாலும் பேச்சுத் திறனில் பின் தங்கியே உள்ளனர். அதே நேரத்தில் எழுத்துத் திறனில் ஓரளவு முன்னேறி உள்ளனர். காரணம் எழுதும் போது சிந்தித்துக் கருத்தை உணர்த்த நேரமும் வாய்ப்பும் உண்டு. ஆனால் பேசும் போது உடனடியாகக் கருத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலை இருப்பதால் மாணவர்கள் தயங்குகின்றார்கள். பயமும் சொற்கோவைப் பற்றாக்குறையும் ஏனைய காரணங்கள் ஆகும். அவர்கள் தயக்கத்தைப் போக்க அதிகமான பேச்சுப் பயிற்சி தரப்படுதல் வேண்டும்.



தமிழின் இரட்டை வழக்குத் தன்மை

தமிழைப் பொறுத்த அளவில் பேச்சுத் தமிழ், எழுத்துத் தமிழ் என இரட்டை வழக்குகளை உடையது. எழுத்து மொழிக்கும், பேச்சு மொழிக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் மொழி கற்பித்தலில் அதிக செல்வாக்கும் செலுத்துகின்றன. இவை தொடர்பான மொழியியல் உளவியல், சமூகவியல் அம்சங்கள் நமது மொழி கற்பித்தலில் அறிவியல் ரீதியாக நோக்குவது இல்லை.

ஆரம்ப வகுப்புகளில் தமிழ் கற்பித்தலைப் பொறுத்தவரை இவை மிகவும் முக்கியமானவை ஆகும். பேச்சுத் தமிழ் தரம் குறைந்தது. கொச்சையானது. இலக்கணம் அற்றது. எழுத்துத் தமிழே செம்மையானது. உயர்ந்தது. இலக்கணம் உடையது என்ற பொதுவான மனப்பாங்கே நமது மொழிக் கல்வியாளர்களிடம் நிலவுகிறது. இதனால் மாணவர்கள் கிளைமொழிப் பழக்கத்தை முற்றிலும் களைந்துவிட்டு எழுத்துத் தமிழில் அவர்களைப் பேசவும் எழுதவும் பயிற்றுதல் வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் வெவ்வேறு கிளை மொழிகளைப் பேசுவவோருக்கு எழுத்துத் தமிழைக் கற்பிப்பதில் உள்ள பிரச்சனைகளுக்கும் சபையான தீர்வு காண முடியவில்லை. பிரச்சனைகள் இருப்பதாக உணரப்படவில்லை. எனவே, கிளை மொழிப் பழக்கத்தை, புழக்கத்தை அறவே களைய வேண்டும் என எண்ணுவது அறிவீனமாகும். ஆதலின், கிளை மொழிகளை இணைத்தே பேச்சுத் தமிழை வளர்க்க வேண்டும். மாணவர்களுக்குக் கற்றுத் தருதல் வேண்டும்.



தமிழில் உரையாடல்

தமிழாசிரியர்கள் வீட்டிலும் பிற இடங்களிலும் தனித் தமிழில் ( பேச்சுத் தமிழில்) உரையாட வேண்டும். இதனை நோக்கும் எத்தனையோ குழந்தைகள் அவரைப் பின்பற்ற வாய்ப்பு உள்ளது. பள்ளிகளில் மாணவர்களை உரையாடவிட்டு, அந்த உரையாடலில் காணப்படும் உச்சரிப்புப் பிழைகள், ஆங்கிலம் போன்ற அயல்மொழிச் சொற்களைக் களையலாம். - பேச்சுத் தமிழை வளப்படுத்தலாம்.

பேச்சுப் போட்டி போன்றவற்றை வகுப்பறை அளவில், சுருக்கமான முறையில் அடிக்கடி நடத்தி பேச்சுத் தமிழில் பேசக் கற்றுக் கொடுக்கலாம். பேசுந்திறனை வளர்க்கலாம். எழுத்துத் தமிழில் பேசுவதுதான் தமிழ்ச் சொற்பொழிவு என்ற எண்ணத்தைப் போக்கி மற்றவர்க்கு கேட்பவர்க்குப் புரியும் வகையில் பேசுவதே சிறப்பு என்பதை உணர்த்தலாம்.

மழலைக் குழந்தைகளிடையே படம் பார்த்துக் கதை சொல்லச் செய்யலாம்.

எ-டு காகமும் நரியும், சிங்கமும் சுண்டெலியும் என பேச்சுத் தமிழிலேயே சொல்லச் செய்யலாம்.

உச்சரிப்பும் நாநெகிழ் பயிற்சியும்

பேச்சுத் தமிழைக் கற்பிக்கும் பொழுது உச்சரிப்பில் மிகுந்த கவனம் செலுத்துதல் வேண்டும். தமிழின் சிறப்பே உச்சரிப்பின் உள்ளடக்கம் ஆகும். குறிப்பாக ல, ள, ழ ஆகியவற்றை முறையாகக் கையாள வேண்டும் - முறையாக உச்சரிக்க வேண்டும். இல்லையெனில் பொருளே உச்சரிக்க வேண்டும். இல்லையெனில் பொருளே மாறுபட்டு விடும். குறிப்பாக ழகரத்தைச் சரியாகப் பயன்படுத்தப் பழக்க வேண்டும்.

பழம் கொண்டார் என்பதைப் பலம் கொண்டார் என்றால் பொருள் மாறுவிடும். அத்தோடு வாக்கியமும் மாறிவிடும். எனவே பேச்சுத் தமிழைக் கற்பிக்கும் பொழுது உச்சரிப்புக்கு உரிய இடம் தர வேண்டும்.

இதற்கு நாநெகிழ் பயிற்சியும் தரலாம். இதற்கு கீழ் கண்ட பாடலைப் போன்ற படைப்புகள் பெரிதும் கை கொடுக்கும்.

“ஓடுற நரியில ஒருநரி கிழநரி
கிழநரி முதுகில ஒருபிடி நரைமயிர்”

அவ்வப்போது நகைச்சுவைத் துணுக்குகளையும், பேச்சுத் தமிழில் கூறச் செய்யலாம். இதனால் சலிப்பு ஏற்பட்டது. ஆர்வம் கூடும்.

முதல் வகுப்பில் பேச்சுத் தமிழைக் கற்பித்தல்

1. எளிய சொற்றொடர்களைத் திரும்பத் திரும்ப மாணவர்களைச் சொல்லச் செய்தல்

2. எளிய பாடல்களைத் திரும்பத் திரும்பச் சொல்லச் செய்தல், குழுவாகவும் சொல்லச் செய்தல்

3. பாடல்களை உரிய செய்கைகளுடனும் (நடித்தல்) உடல் அசைவுகளுடனும் ஒப்புவிக்கும். திறனை வளர்த்தல்

4. ஆம் அல்லது இல்லை என்று பதில் வருமாறு எளிய வினாக்களுக்கு விடை கூறும் திறனை வளர்க்கும் வகையில் கற்பிக்க வேண்டும்.

இரண்டாவது வகுப்பில் வந்து ஐந்தாவது வகுப்பு வரை பேச்சுத் தமிழைக் கற்பித்தல்

நாடக உரையாடல்கள் போல் பாடல்களை அமைத்து ஆசரியர் நன்கு பேசி, நடித்துக் காட்டி, பின்னர் மாணவர்களைப் பேசி நடிக்கச் செய்ய வேண்டும்.

உரையாடல்களை அமைக்கும் போது எழுத்துத் தமிழில் அடைக்காமல் பேச்சுத் தமிழ்த் திறனை வளர்க்கலாம். பேச்சுத் தமிழையும் வளர்க்கலாம்.

எடுத்துக்காட்டாக,

''சாலையில் மையத்தில் நடக்காதே!” என்பதை இன்று எல்லோரும் குறிப்பாக மாணவர்கள் ''ரோட்ல சைன்ட்ரல்ல நடக்காத‘‘ என்று பேசுகிறார்கள்.

“சாலையில் மையத்தில் நடக்காதே” என்று எழுத்துத் தமிழில் பேச வேண்டும் என்பது பொருள் அல்ல.

“சாலையில் மையத்தில் நடக்காத!” என்று பேச்சுத் தமிழில் கலப்பின்றுப் பேசுவதே ஆகும்.

எனவே, ஆசிரியர் முதலில் கலப்பின்றிப் பேசி மாணவர்களையும் அது போலவே பேசப் பழகுவது சிறப்பாகும். மேலும் இது தமிழுக்கு அந்த ஆசிரியர் செய்த பெருந்தொண்டும் ஆகும்.



ஆங்கிலத் தாக்கம்

பேச்சுத் தமிழை வளர்ப்பதில் பெரிய இடர்பாடு என்னவென்றால் ஆங்கிலத் தாக்கமே ஆகும். உண்மையில் இன்றையப் பேச்சுத் தமிழ், தனித் தமிழாக இல்லை. ஆங்கிலமும் தமிழும் கலந்த ஒரு கலப்பு மொழியாகவே உள்ளது. இதற்குக் காரணங்கள்

1. ஆங்கில ஆட்சியினால் ஏற்பட்ட விளைவு என்பது தெளிவு

2. படித்தவர்கள் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துவதுதான் தங்களுக்கு மதிப்பு (கெளரவம்) எனக் கருதி ஆங்கிலச் சொற்களைக் கலந்து கலந்து பேசியது.

3. படிக்காதவர்களும் இவர்களுடன் பழகிப் பழகி ஆங்கிலச் சொற்களைக் கலந்து பேசியது, பேசுவது.

4. இதனால் தமிழ் இன்று ஒரு கலப்பு மொழி ஆகிவிட்டது கவலைக்குரியதே.

இதனால் ஆங்கிலத்தைக் களைந்து தமிழைத் தனித் தமிழாக்க வேண்டியது தமிழாசிரியர்களுடைய கடமை ஆகும். முதலில் தமிழாசிரியர்கள் பேசும் பொழுது தனித் தமிழில் பேச வேண்டும். இதற்காக எழுத்துத் தமிழில் பேச வேண்டும் என்பது பொருள் அல்ல. பேச்சுத் தமிழிலேயே கலப்பின்றிப் பேசுவதாகும்.

முடிவுரை

தமிழ் மொழியில் எழுதுவது போல் ஒலிப்பது பேசுவது இல்லை. ஒலிப்பது போல் பேசுவது போல் எழுதுவது இல்லை. க, ச, ட, த, ப போன்ற எழுத்துகளை எழுதும் போது ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரே ஒலியை மட்டும் எழுதுகிறோம். உச்சரிக்கும் போது வெவ்வேறாக உச்சரிக்கிறோம். இத்தகைய வேறுபாட்டை மாணவர்களுக்குத் தெளிவுபடுத்துதல் வேண்டும்.

எடுத்துக்காட்டாக, கப்பல், சிங்கப்பூர், முகப்பு போன்ற சொற்களில் உள்ள க, கர வேறுபாடுகள் சூழ்நிலையால் தோன்றுகின்றன என்பதை மாணவர்களுக்கு விளக்க வேண்டும். இந்த வகையில் எல்லாம் பேச்சுத் தமிழைப் பள்ளகளில் வளர்க்கலாம்.

பார்வை நூல்கள் விவரம்

1.தமிழ் பயிற்றும் முறை, டாக்டர் ந.சுப்பு ரெட்டியார், மெய்யப்பன் தமிழாய்வகம் வெளியீடு, சிதம்பரம், டிசம்பர்’2000.

2. நற்றமிழ் கற்பிக்கும் முறைகள், வி.கணபதி, சந்திரிகா ராஜமோகன், சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை, 2002.

3. கார்த்திகேயன் கம்பெனி, (1970), கற்பித்தல் பொது முறைகள், ஏசியன் பிரிண்டர்ஸ், சென்னை.

4. Skinner, B.F., (1967), “A Functional Analysis Of Verbal Behaviour”.

5. Bright Ideas – Teacher Handbooks – Developing Children’s Writing, Scholastic Publications.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/serial/p4c.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License