மருத்துவச் சிரிப்புகள்
தேனி.எஸ்.மாரியப்பன்
டாக்டர்: எதுக்குத்தான் சிபாரிசு கடிதம் வாங்குறதுன்னு விவஸ்தையில்லாமப் போச்சு...
நண்பர்: ஏன்...?
டாக்டர்: ஆபரேசன் பண்ணும் போது ரத்தம் வரக்கூடாதுன்னு மந்திரி கிட்டே சிபாரிசுக் கடிதம் வாங்கிட்டு வந்திருக்கிறார்.
*****
ஒருவர்: தொலைக் காட்சி நிகழ்ச்சியிலே ஒரு டாக்டர் மருத்துவக் குறிப்பை எப்படி சொல்ல ஆரம்பிப்பார்?
மற்றவர்: அன்பார்ந்த நோயர்களே...
*****
டாக்டர்: இன்னும் நான் உங்களுக்கு ஊசியே போடலியே அதற்குள் ஏன் கத்துகிறீர்கள்?
வந்தவர்: உங்க நர்சைப் பார்த்ததும் என் மனைவி ஞாபகம் வந்திடுச்சு டாக்டர்...
*****
பெண்: என் கணவருக்கு ஞாபகமறதி அதிகமாயிடுச்சு டாக்டர்..?
டாக்டர்: எப்படியம்மா சொல்றீங்க?
பெண்: பீரோன்னு நினைத்து, பிரிஜ்ஜைத் திறந்து சட்டையைத் தேடுகிறார்...!
*****
வாலிபர்: மூன்று மாதமாக எனக்கு கழுத்து வலி டாக்டர்...
டாக்டர்: உங்க மேனேஜர்கிட்டே சொல்லி டைப்பிஸ்ட் சீட்டை முன்னால போடச் சொல்லுங்க...
*****
ஒருவர்: போலி டாக்டரிலே இவர் ஒரு வித்தியாசமானவர்...!
மற்றவர்: எப்படிச் சொல்றீங்க...?
ஒருவர்: எந்த வியாதியையும் இவர் குணப்படுத்தாமல் விட்டதில்லை...!
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.