போலீஸ் சிரிப்புகள்
தேனி.எஸ்.மாரியப்பன்
போலீஸ்: காணாமல் போன உங்கள் வேலைக்காரியோட அடையாளம் சொல்ல முடியுமா?
வீட்டுக்காரர்: மார்பில் ஒரு மச்சம் இருக்கும் சார்.
*****
வந்தவர்: என் வீட்டில் நடந்த நாலாவது திருட்டு சார் இது...
போலீஸ்: ஏன் எங்களிடம் கம்ப்ளைண்ட் கொடுக்கல...?
வந்தவர்: மாமூலா உஙகளுக்குத் தெரிந்திருக்கும் என நினைத்தேன் சார்...
*****
போலீஸ்: உங்க வீட்டில திருடின திருடனை அடையாளம் சொல்ல முடியுமா ?
வந்தவர்: வயது 32 மாநிறம் 165 செ.மீ உயரம் திருடின அன்று நீல நிற சட்டையும் பேண்ட்டும் அணிந்திருந்தான்...
*****
திருடன: சார் அந்த கோடி வீட்டு குப்புசாமியைக் கொஞ்சம் கண்டித்து வையுங்கள்...
போலீஸ்: ஏம்ப்பா...?
திருடன்: அவர் வீட்டில திருடும் போது ரொம்பத் தொந்தரவு கொடுக்கிறார்..
*****
போலீஸ்: உங்க வீட்டில திருட்டு நடந்ததும் ஏன் எங்களுக்கு போன் செய்யலை...?
வந்தவர்: போனையும் திருடிட்டுப் போயிட்டான் சார்...
*****
ஒருவர்: சார்... நாலு திருடர்கள் மடக்கி என்னிடம் இருந்த ஒரு லட்ச ரூபாயைப் பிடுங்கிக் கொண்டார்கள்.
போலீஸ்: அதிலே உயரமா கருப்பாக் கண்ணாடி அணிந்தவன் இருந்தானா...?
ஒருவர்: ஆமாம் சார்...
போலீஸ்: அப்போ பணம் கிடைக்காது போங்க...
*****
போலீஸ்: என்னய்யா இது அநியாயம்... சொந்த வீட்டுக்கே வெடிகுண்டு வைத்திருக்கிறாயே...
வந்தவர்: என் மாமனாரும் மாமியாரும் வந்து ஆறு மாதம் ஆகிறது... வேறு என்ன செய்ய...?
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.