மாத்திரை யாருக்கு?
ஒரு பெண் தன் கணவனை ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தாள்.
ஒரு வாரம் தங்கி தன் கணவனைக் கவனித்து வந்தாள். டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குப் போக வேண்டிய நேரம் வந்தது.
டாக்டர் அந்தப் பெண்ணை அழைத்து இப்படிச் சொன்னார்.
"உங்கள் கணவருக்கு மிகவும் ஓய்வு தேவை. இந்த தூக்க மாத்திரையைப் பயன்படுத்துங்கள்" என்றார்.
அவள், "மாத்திரையை எப்போது கொடுக்க வேண்டும்?" என்று டாக்டரைக் கேட்டாள்.
அதற்கு டாக்டர், "இந்தத் தூக்க மாத்திரை அவருக்கில்லை, உங்களுக்குத்தான். உங்கள் கணவர் நல்ல ஓய்வு எடுக்கவும் விரைவில் குணமாகவும் இதுதான் ஒரே வழி" என்றார்.
- தேனி எஸ்.மாரியப்பன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.