என் வயதைச் சொல்லுங்கள்!
தன் அழகில் கர்வம் கொண்ட பெண் ஒருத்தி பெர்னாட்ஷாவிடம் வந்தாள். "என் வயது என்னவென்று சொல்லுங்கள் பார்க்கலாம்" என்றாள்.
ஷா அவளை மேலும் கீழும் பார்த்தார். பின் உன் பற்களைப் பார்த்தால் 18 வயது போல் தெரிகிறது. கூந்தலைப் பார்த்தால் 19 வயதுக்கு மதிப்பிடலாம். தோற்றத்தைப் பார்த்தால் 16 என்றே சொல்லலாம்." என்றார்.
பெருமையில் பூரித்துப் போனாள் அந்தப் பெண். "என் அழகைப் புகழ்ந்ததற்கு நன்றி. சரியான வயதைச் சொல்லுங்களேன்." என்றாள்.
உடனே ஷா "இன்னுமா தெரியவில்லை. 18, 19, 16 மூன்றையும் கூட்டிப்பார். 53 வருகிறதல்லவா? அதுதான் உன் சரியான வயது" என்றார்.
அந்தப் பெண் அசடு வழிய நின்றாள்.
- தேனி எஸ்.மாரியப்பன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.