மொட்டைக் கடுதாசி
ஒரு அதிகாரி மேஜையில் வைத்திருந்த கடிதத்தையும், கவரையும் காணாது தவித்தார். காரணம் அந்தக் கடிதங்களில் முகவரி எழுதாமல் வைத்திருந்தார்.
பியூனைக் கூப்பிட்டு, "மேஜை மீது வைத்திருந்த கவரைப் பார்த்தாயா? என்று கேட்டார்.
"அதுவா...! அதைத் தபாலில் போட்டு விட்டேன்" என்றான் பியூன்.
"தபாலில் போட்டு விட்டாயா? அந்தக்கடிதக் கவரில் விலாசம் எழுதவில்லையே!" என்றார்.
அதற்கு பியூன், "எனக்குத் தெரியும் சார்! நேற்று நம் அலுவலகத்திற்கு ஒரு மொட்டைக் கடிதம் வந்ததே... அதற்குப் பதில் எழுதியிருப்பீர்கள் என்று நினைத்தேன். அவர்களுக்கும் அட்ரஸ் இல்லாமல் போகட்டும் என்று நினைத்துத் தபாலில் போட்டு விட்டேன்." என்றான் பியூன்.
- தேனி.எஸ்.மாரியப்பன்

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.