சாப்பாட்டுச் சிரிப்புகள்
தேனி.எஸ்.மாரியப்பன்
டாக்டர்: என்னங்க...எக்ஸ்ரேயில் உங்க வயிற்றில நிறைய சின்னச் சின்ன கரண்டியா இருக்கு?
வந்தவர்: நீங்க தானே டாக்டர் தினம் ரெண்டு ஸ்பூன் சாப்பிடச் சொன்னீங்க...!
*****
சர்வர்: சார்...என்ன சாப்பிடுறீங்க?
சாப்பிட வந்தவர்: நாலு கிலோ அரிசியும், ஒரு கிலோ உளுந்தும் ஆட்டிக் கொடுத்தால் என்ன டிபன் கொடுப்பியோ அதைக் கொடுப்பா...
சர்வர்: ?.....!.....?
*****
ஒருத்தி: ஆம்பளை சமைத்து எனக்கு உட்கார்ந்து சாப்பிட பிடிக்காதுடி...
மற்றவள்: நீயே சமைத்து விடுவாயா..?
ஒருத்தி: இல்ல...டைனிங் ஹாலில் நின்று கொண்டே சாப்பிட்டு விடுவேன்.
*****
டைப்பிஸ்ட்: ஏன் சார்...இரண்டு நாளா உங்க மனைவிதான் சமைக்கிறார்களா...?
மானேஜர்: உனக்கு எப்படிம்மா தெரியும்...?
டைப்பிஸ்ட்: இரண்டு நாளா சாப்பாட்டை கீழே கொட்டி விடுகிறீர்களே...!
*****
ஒருவர்: என்னப்பா இட்லி மல்லிகைப் பூ போல இருக்கும்னு சொன்னே... நீலக் கலரா இருக்கே?
சர்வர்: சொட்டு நீலம் கொஞ்சம் அதிகமாயிடுச்சு சார்...!
*****
ஒருவர்: பாதிப்பேர் பந்தியில இருந்து பாதியிலேயே எழுந்து போயிட்டாங்களே...?
மற்றவர்: ஐம்பது ரூபாய் மொய் எழுதினவர்களுக்கு பாயசம் இல்லேன்னு சொல்லிட்டாங்களாம்...!
*****
ஒருவன்: உங்கப்பாவிற்கு மணி அடிச்சா சாப்பாடுன்னு சொல்றியே...ஸ்கூல் வாத்தியாரா இருக்காரா..?
மற்றவன்: இல்லடா...வேலூர் ஜெயிலில் இருக்கிறார்...!
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.