பஞ்சாங்கமாக இருந்தால்...?
ஒருவர் எந்த நேரமும் புத்தகமும் கையுமாகப் படித்துக் கொண்டே இருந்தார். அவரை மணந்து கொண்ட புது மனைவி மிகவும் அலுத்துக் கொண்டே சொன்னாள், "புத்தகங்களின் மீது இவ்வளவு ஆசை வைத்திருக்கிறீர்களே...! என்னையும் ஒரு புத்தகமாக நினைத்து என்னிடம் ஆசையாக பழகக் கூடாதா? என்றாள்.
அதற்கு அவன், "நீ பஞ்சாங்கமாக இருந்தால் நிச்சயம் அப்படித்தான் ஆசை வைத்துப் பழகியிருப்பேன்." என்றான்.
"பஞ்சாங்கமா...? அதில் அப்படி என்ன விஷேசம்?" என்றாள்.
அதற்கு அவளின் கணவன், "ஒவ்வொரு வருடமும் புதிதாக வாங்க வேண்டியிருக்கும். பழையதைக் கட்டி பரண் மேல் போட்டு விடுவார்கள்." என்றான்.
- தேனி.எஸ்.மாரியப்பன்

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.