காணாமல் போன மனைவி!
ஒருவன் வேகமாக தபால் ஆபீஸ் நோக்கி வேகமாக ஓடி வந்தான். அங்கே இருந்த போஸ்ட் மாஸ்டரிடம், "என் மனைவி மீண்டும் காணாமல் போய் விட்டாள்." என்றான்.
போஸ்ட் மாஸ்டருக்குக் கோபம் வந்தது. "உன் மனைவி காணாமல் போய் விட்டால் போலீஸ் ஸ்டேசனில் போய் புகார் கொடு. இங்கே வந்து ஏன் சொல்கிறாய்? என்றார்.
அதற்கு அவன், "எனக்குத் தெரியும் சார்! போன தடவை காணாமல் போன போது அங்கேதான் புகார் கொடுத்தேன். அவர்கள் கண்டுபிடித்துக் கொண்டு வந்து விட்டார்கள்" என்றான்.
- தேனி.எஸ்.மாரியப்பன்

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.