எதிர்க்கச் சொன்னது ஏன்?
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் ஒரு தீர்மானம் வந்தது. அதை எதிர்க்க விரும்பிய இராஜாஜி, பெரியார் ஈ.வே.ராவிடம் தீர்மானத்தை எதிர்த்துப் பேசுமாறு கேட்டுக் கொண்டார்.
“எதற்காக எதிர்க்கச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். பெரியார் ஈ.வேரா.
“முதலில் எதிர்த்துப் பேசுங்கள். பிறகு காரணத்தைச் சொல்கிறேன்” என்றார் இராஜாஜி.
பல காரணங்களை எடுத்துக் கூறி ஈ.வே.ரா எதிர்த்துப் பேசினார். தீர்மானம் தோல்வி அடைந்தது.
“இப்போது சொல்லுங்கள். எதற்காக தீர்மானத்தை எதிர்த்துப் பேசச் சொன்னீர்கள்?” என்று கேட்டார் பெரியார் ஈ.வே.ரா.
“எல்லாக் காரணங்களையும் நீங்களே பேசும் போது கூறிவிட்டீர்களே” என்றார் ராஜாஜி.
- தேனி. எஸ். மாரியப்பன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.