கண்டுபிடி! கண்டுபிடி!!
முற்பாதி போய்விட்டால் இருட்டேயாகும்
முன் எழுத்து இல்லாவிட்டால் பெண்ணேயாகும்.
பிற்பாதி போய்விட்டால் ஏவற் சொல்லாம்
பிற்பாதியுடன் முன் எழுத்து இருந்தால் மேகம்
சொற்பாகக் கடைதலைசின் மிருகத் தீனி
தொடர் இரண்டாம் எழுத்து மாதத்தில் ஒன்றாம்
பொற்பார்திண் புயமுத்து சாமி மன்னா
புகலுவாய் இக்கதையின் புதையல் கண்டே.
இந்தத் தமிழ்ப் பாடலில் “புதையல்” என்கிற விடை கண்டறியும் வகையில் விடைகள் இலைமறை காயாக அமைத்து “அழகிய சொக்கநாதப் பிள்ளை” என்பவர் எழுதிய புதிர்ப் பாடல் இது.
- சித்ரா பலவேசம், திருநெல்வேலி.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.