சமய நூல் அறிஞரைத் தெரியுமா?
புகழ் பெற்ற சமய நூல் அறிஞர் டாக்டர்.சார்ல்பார்த் என்பவரை நேரில் பார்த்திராத ஒரு முதியவர் அவரிடம் கேட்டார், “ஐயா,உங்கள் பேர் என்ன?”
“என் பெயர் டாக்டர்.சார்ல்பார்த்”
“இதே பெயரில் சமய நூல் அறிஞர் ஒருவர் இருக்கிறார். அவரை உங்களுக்குத் தெரியுமா?”
“ஓ, தெரியுமே! அவருக்குத் தினமும் முகச்சவரம் செய்து தலை வாரியும் வேலையைக் கூட நான்தான் செய்கிறேன்”
“அப்படியானால்...?”
“நீங்கள் குறிப்பிடும் சமய நூல் அறிஞர் நான்தான்”
- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.