பணக்காரப் பெண்ணின் முகவரி?
அவர்களில் ஒருவனை இரண்டு பெண்கள் காதலித்தார்கள். ஒருத்தி ஏழை, ஆனால் அழகாக இருப்பாள். மற்றவள் சுமாரான அழகு. இரண்டுபேரில் யாரைத் திருமணம் செய்வது? என்று தனது நண்பனிடம் ஆலோசனை கேட்டான்.
நண்பன் சொன்னான். “ஏழையாக இருக்கிற அழகிய பெண்ணைத் திருமணம் செய்து கொள். அவள்தான் உனக்கு ஏற்றவள். வாழ்க்கையில் உனக்கு உறுதுணையாக இருப்பதுடன் அழகாகவும் இருப்பாள் என்று சொன்னான்.
கடைசியாக அவன், “சரி, அந்தப் பணக்காரப் பெண் எங்கிருக்கிறாள்? அவளது முகவரியைச் சொன்னால், நான் அவளைத் திருமணம் செய்து கொள்கிறேன்” என்றான்.
- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.