ஓவியனின் வாய்த்திறன்!
ஒரு ஓவியன் தன் கையில் சுருட்டி வைத்திருந்த ஒரு தாளில் பசுவும் புல்லும் வரைந்து இருப்பதாகச் சொன்னான்.
சுருட்டி வைத்திருந்த தாளைப் பிரித்து பார்த்தால், அதில் பசுவும் இல்லை, புல்லும் இல்லை.
உடனே அங்கிருந்த ஒருவன், “இந்தப் படத்தில் புல் எங்கே?” என்று கேட்டான்.
அதற்கு அந்த ஓவியன், “புல்லைப் பசு தின்று விட்டது” என்றான்.
“அப்படியானால்... பசு எங்கே?” என்று கேட்டான் இன்னொருவன்.
உடனே அந்த ஓவியன், “பசு புல்லைத் தின்று விட்டதால் அதை விரட்டி விட்டுட்டேன்” என்றான்.
ஓவியனின் திறன் ஓவியத்திலில்லை. வாயில் இருந்தது.
- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.