பத்து வயதில் பாட்டெழுத முடியுமா?
மொஜார்ட் என்பவர் இங்கிலாந்தின் பிரபல சங்கீத மேதை. அவருடைய பாடல்கள அனைத்தும் பிரசித்தி பெற்றவை.
ஒரு இளைஞன் ஒரு முறை அவரிடம் வந்து, “சிறந்த பாடல்களை எப்படி இயற்றுவது?” என்று கேட்டான்.
“நீ இளைஞனாக இருக்கிறாய், முதலில் எளிய பாட்டுக்களை இயற்றிப் பார்” என்றார் மொஜார்ட்.
“ஆனால், நீங்கள் பத்தாவது வயதிலேயே கவிதைகளை இயற்றத் தொடங்கி விட்டீர்களே” என்றான் அவன்.
“உண்மைதான். ஆனால், நான் எப்படி பாடல் இயற்றுவது என்று யாரையும் கேட்கவில்லையே...!” என்றார் மொஜார்ட்.
- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.