மாடுகளைச் சீக்கிரம் ஓட்டுங்கள்!
ஒரு சமயம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பால்வளத்துறை மானியம் குறித்த விவாதம் நடந்து கொண்டிருந்தது.
அந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய குமரி அனந்தன் தன்னுடைய இலக்கியப் பாணியில் பேச்சைத் தொடங்கினார்.
“மாலை மயங்கும் நேரம். கண்ணன் குழல் ஊதிக் கொண்டிருக்கிறான். மாடுகள் வீடு திரும்புகின்றன” என்று வர்ணனைகளுடன் பேசத் தொடங்கினார்.
அப்போது மாலைக் கூட்டம் முடியும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.
பேரவைத் தலைவராக இருந்த இராஜாராம் அவர்கள் குறுக்கிட்டு, “இப்போது மாலை நேரம் கடந்து கொண்டிருக்கிறது. இந்த விவாதத்தில் இன்னும் நிறைய பேர் கலந்து பேச வேண்டியிருக்கிறது. உறுப்பினர் அனந்தன் மாடுகளைச் சீக்கிரமாக ஓட்டிக் கொண்டு போனால் நல்லது” என்று கூறியதும், அவையில் மிகுந்த கரவொலியும், சிரிப்பொலியும் எழுந்தது.
- தேனி.எஸ்.மாரியப்பன்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.