முல்லாவின் அழுகைக்குக் காரணம்!
முல்லா ஒரு நாள் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார்.
அவரைக் காண வந்த அவரின் நண்பர், “என்ன முல்லா, உன் மனைவி இறந்த போது கூட நீ இப்படி அழவில்லை, ஒரு ஆடு காணாமல் போனதற்கு இப்படி அழுகிறாயே...!” என்று கேட்டார்.
அதற்கு முல்லா, “என் மனைவி இறந்த போது, ஊர் மக்கள் அனைவரும், நீ ஒன்றும் கவலைப்படாதே! வேறொரு திருமணம் செய்து வைக்கிறோம் என்றார்கள். ஆனா, ஆடு காணாமல் போனதற்கு வேறு ஆடு வாங்கித் தருகிறோம் என்று யாரும் சொல்லவில்லையே...!” என்றார்.
- தேனி.எஸ்.மாரியப்பன்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.