கடவுளுமா...?

முகநூல் (ஃபேஸ்புக்) மோகத்திலிருந்து விடுபடக் கடவுளை நோக்கிக் கடுந்தவம் இருந்தான் ஒருவன். சாதாரணமாக இது போல தவமிருந்தால் நேரில் வரும் கடவுள் இப்போது வரவில்லை.
தவத்தின் கால அளவை இருமடங்காக்கினான்... கடவுள் வரவில்லை.
தவத்தை மும்மடங்காக்கினான் அப்போதும் வரவில்லை...
நான்கு, ஐந்து மடங்கு எனக் கூட்டினான். அப்போதும் கடவுள் வரவே இல்லை...
கடைசியாக ஒரு முறை என ஆறாம் முறை தவத்தைக் கூட்டினான்.
திடீரென ஓடி வந்தார் கடவுள்... “பக்தனே... உன் தவத்தில் மகிழ்ந்தேன்... உன்னைக் காண வரக் காலதாமதமாகிவிட்டது...” என்றார் படபடப்புடன்
அவன் கோபமாக, “கடவுளே... இது ஆறாவது முறை...! ஏற்கனவே ஐந்து முறை தங்களை அழைத்து தவமிருந்த போது வராமல் இருந்து விட்டீர்களே...” என்று வருந்தினான்.
“பக்தனே, இதற்கு முன்பு நீ என்னை ஐந்து முறை அழைத்தாயா...? இவ்வளவு கஷ்டப்பட்டதற்கு என் முகநூலில் எனது உள்பெட்டியில் (இன்பாக்ஸில்) ஒரு தகவலை அனுப்பியிருக்கலாமே... அதைப் பார்த்ததும் நான் உடனே வந்திருப்பேனே... என்னை மன்னித்துவிடு... நான் நாள் முழுக்க முகநூலில் மூழ்கிக் கிடந்ததால் உன் வேண்டுகோள் எனக்குக் கேட்காமல் போய்விட்டது” என்றார் கடவுள்.
அந்த மனிதன் அங்கே செத்துக்கிடந்தான்.
(இணையத்தில் பார்த்தது)
இணையத்தில் பார்த்ததை அனுப்பியவர்:- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.