தீபாவளி சிரிப்புகள்
சித்ரா பலவேசம்
ஒருவர்: என்ன அந்த தனியார் கம்பெனி கிளார்க் கேட்கிற வெடியை இல்லைன்னு சொல்லி சத்தம் போட்டு அனுப்புறீங்களே...? அப்படி என்ன வெடி கேட்டார் ?
வெடிக்கடைக்காரர்: அவரோட கம்பெனி மேனேஜர் பதவிக்கு வெடி வைக்கணுமாம் . அதுக்கு எந்த வெடி நல்லதோ அதைக் குடுங்கன்னு கேட்கிறார்.
*****
ஒருவர்: அந்த டாக்டருக்கு தீபாவளிக் கிறுக்கு பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்...
மற்றவர்: எதை வைத்துச் சொல்றே?
ஒருவர்: காய்ச்சலுக்கு மூன்று வேளைக்கும் "பாம்பு மாத்திரை" சாப்பிடுங்கன்னு எழுதிக் கொடுத்திருக்காரே...!
*****
ஒருவர்: தலைத் தீபாவளிக்கு வந்த கம்யூனிசவாதியான உங்க மருமகன் கோவிச்சுட்டுத் திரும்பிப் போகிறாரே ஏன்?
மற்றவர்: அவருக்கு வெடிகளில் "அணுகுண்டு" வாங்கி வைத்திருந்தது பிடிக்கலையாம்.
*****
ஒருவர்: தலைத் தீபாவளிக்கு வந்த உங்க மாப்பிள்ளை கண்ணைக் கட்டிக் காதைப் பொத்தி வீட்டுக்குள்ளேயே படுத்துக் கிடக்கிறாரே, அவருக்கு வெடின்னா அவ்வளவு பயமா?
மற்றவர்: இல்லை, அவரு பக்கத்து வீடுகளில் போடுகிற வெடியெல்லாம் தனக்கும் வாங்கித் தரனும்னு அடம்பிடித்ததாலே... நாங்கதான் இப்படி படுக்க வைத்திருக்கிறோம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.