மாணவிகள் விடுதிக்குள் மாணவன் நுழையலாமா...?
கல்லூரி ஒன்றில் மாணவிகள் விடுதிக்குள் கல்லூரி மாணவர்கள் நுழைந்து விடுகிறார்கள் என்று கல்லூரி முதல்வருக்கு ஒரு புகார் வந்தது.
கல்லூரி முதல்வர் வகுப்பறை ஒன்றினுள் நுழைந்தார்.
அங்கிருந்தவர்கள் அனைவரும் அமைதியாயினர்.
கல்லூரி முதல்வர், “மாணவிகள் விடுதிக்குள் மாணவர்கள் நுழைந்து விடுவதாக எனக்குப் புகார் வந்திருக்கிறது. இனி யாராவது அப்படி நுழைவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு ஐநூறு ரூபாய் அபராதம் விதிக்கப்படும்” என்றார்.
மாணவர்களிடையே சிறு சலசலப்பு கேட்டது.
முதல்வர் தொடர்ந்து, “அதே மாணவன் இரண்டாவது முறை தெரிந்தால் ஆயிரம் ரூபாய் அபராதம்” என்றார்.
அப்போதும் மாணவர்களிடையே முணுமுணுப்பு சத்தம் கேட்டது.
மாணவர்களுக்கு அபராதம் என்றவுடன் பயம் வந்து விட்டது எனும் நம்பிக்கையுடன் முதல்வர் கடுமையான குரலில், “அடுத்த முறையும் மாணவன் சென்று மாட்டிக் கொண்டால் இரண்டாயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்” என்றார்.
அப்போது வகுப்பறையில் பின்னால் அமர்ந்திருந்த மாணவன் கேட்டான்,
“மாதம் முழுவதும் மாணவிகள் விடுதிக்குள் நுழைவதற்கு ஏதாவது சலுகைக் கட்டணம் உண்டா சார்?”
- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.