“வேலு! உனக்கு நான் ரெண்டு மாடும், இன்னொரு ரெண்டு மாடும், அதன் பிறகு இன்னும் ரெண்டு மாடும் தர்றேன். இப்ப உன் வீட்டில் மொத்தம் எத்தனை மாடு இருக்கும்?”
“எட்டு, டீச்சர்!”
“மண்டு! கணக்கை மறுபடியும் சொல்றேன். முதல்ல ரெண்டு மாடு தர்றேன். அப்புறம் ரெண்டு மாடு தர்றேன். மறுபடியும் ரெண்டு மாடு தர்றேன். ஆக மொத்தம் எத்தனை மாடுங்க?”
“எட்டு, டீச்சர்”
“போடா முட்டாள்! சரி, இப்ப கொஞ்சம் மாத்தி சொல்றேன். இப்பவாவது கண்டுபிடி பார்க்கலாம். முதல்ல ரெண்டு ஆடு தர்றேன். அப்புறம் ரெண்டு ஆடு தர்றேன். மறுபடியும் ரெண்டு ஆடு தர்றேன். இப்ப உன் வீட்டில் மொத்தம் எத்தனை ஆடுங்க இருக்கும்?”
“ஆறு டீச்சர்!”
“அட, இப்ப மட்டும் எப்படிடா சரியா சொன்னே?”
“எங்க வீட்ல ஏற்கெனவே ரெண்டு மாடு இருக்கு டீச்சர்! ஆனா, ஆடு இல்லியே!”