காதல் மயக்கத்தில்...?
ஒரு கணவனும் மனைவியும் மாலை நேரத்தில் பால்கனியில் அமர்ந்திருக்க, கணவன் மது அருந்திக் கொண்டிருந்தான்.
அந்தக் கணவன் மது அருந்தியவாறே சொன்னான்.
”உன்னை நான் மிக விரும்புகிறேன்; நீ இல்லாமல் என்னால் வாழவே முடியாது.அப்படி ஒரு வாழ்க்கையை என்னால் நினைத்துப் பார்க்கவே இயலவில்லை”
மனைவி கேட்டாள், “என்ன மிகவும் மகிழ்ச்சியான காதல் மயக்கத்தில் இருக்கிறீர்கள் போலிருக்கிறது... உங்களுக்குள் போன மது பேசுகிறதா?”
கனவன், ”நான்தான் பேசுகிறேன். நான் மதுவோடு பேசிக் கொண்டிருக்கிறேன்” என்றான்.
- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.