சொர்க்க வாசல் சந்திப்பு
ஜிம்மியும் ஜானியும் சொர்க்க வாசல் கதவருகே நின்று கொண்டிருந்தார்கள்.
ஜிம்மி: நீ எப்படி இங்கு வந்தே?
ஜானி: அளவுக்கதிகமான குளிர் தாக்கி இறந்துட்டேன். நீ எப்படி இங்கே வந்தே...?
ஜிம்மி: என் மனைவி எனக்குத் துரோகம் செஞ்சான்னு எனக்கு நிச்சயமாய்த் தெரியும். அவளோட கள்ளக்காதலனைப் பிடிக்க, ஒரு நாள் வழக்கத்துக்கு முன்னாடியே வீட்டுக்கு வந்தேன். அவளைக் கண்டபடி திட்டிட்டு அவனை வீடு முழுவதும் தேடினேன். ஆனால் எங்குத் தேடியும் அவனைக் கண்டுபிடிக்க முடியாததால ஆத்திரம் அதிகமாகி எனக்கு மாரடைப்பு வந்துட்டுது.
ஜானி: அடடா! நீ அந்தப் பெரிய பிரிஜ்ஜுக்குள் தேடியிருந்தேன்னா, நாம ரெண்டு பேருமே இன்னிக்கு உயிரோடு இருந்திருக்கலாம்.
- ஆங்கில இதழில் படித்தது
தொகுப்பு:- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.