பொங்கல் சிரிப்புகள்
சித்ரா பலவேசம்
ஒருவர்: அந்த தொலைக்காட்சி நடத்தின பொங்கல் பரிசுப் போட்டியிலே வெற்றி பெற்ற உனக்கு என்ன பரிசு கொடுத்தாங்க?
மற்றவர்: வேறென்ன, பொங்கல்தான்!
*****
ஒருவர்: பொங்கலுக்கு கிப்ட் பாக்ஸா? அப்படி என்னதான் இருக்கு அதில்...?
மற்றவர்: உள்ளே பொங்கல் பாக்கெட், கரும்புத் துண்டு, தேங்காய், பழம்னு போட்டு பாக்கெட் பண்ணியிருக்காங்க
*****
மாப்பிள்ளை: பொங்கலுக்கு மறுநாள் மஞ்சு விரட்டுதானே, நீங்க புதுசா மாப்பிள்ளை விரட்டுன்னு சொல்றீங்களே...?
மாமா: பொங்கலுக்கு வந்த மாப்பிள்ளையை மறுநாளே விரட்டிடனும்னு புதுசா ஒரு விழா கொண்டு வந்திருக்கோம்...!
*****
ஒருவர்: பொங்கல் நாளில் சர்க்கரைப் பொங்கல், கரும்புன்னு ஒரே இனிப்பா இருக்கிறது நல்ல விஷயம்தானே, இதை மாற்றனும்னு சொல்லிப் போராட்டம் செய்றாங்களே... யாரு அவங்க...?
மற்றவர்: சர்க்கரை வியாதிக்காரர்கள்
*****
ஒருவர்: உங்க பெண்ணும், மாப்பிள்ளையும் பொங்கலுக்கு வந்திருக்காங்களா?
மற்றவர்: அட நீங்க வேற, அவங்க தீபாவளிக்கு வந்தவங்க இன்னும் போகாம இங்கேயே தங்கிக்கிட்டிருக்காங்க...!
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.