டாக்சியில் சென்று கொண்டிருக்கும் போது, பின்னிருக்கையில் அமர்ந்திருந்த பயணி ஓட்டுனரிடம் ஏதோ ஒன்றைக் கேட்பதற்காக முதுகில் லேசாகத் தட்டிக் கூப்பிட்டார்.
அவர் அப்படித் தட்டிக் கூப்பிட்டவுடன் அதில் நிலை குலைந்து போனார் அந்த ஓட்டுநர்.
அந்தக் கார் சாலையில் சென்று கொண்டிருந்த இன்னொரு காரை நெருங்கி மோதாமல் தப்பித்தது, அடுத்து வந்த ஒரு லாரியின் மீது இடிக்காமல் தப்பித்தது. கடைசியாக அந்தக் கார் ஒரு மரத்தின் மீது மோதுவது போல் சென்று நின்றது.
சிறிது நேரம் அங்கு மௌனம் நிலவியது.
அதிர்ந்து போன பயணி ஓட்டுநரிடம், ''என் உயிரே போகும் அளவுக்கு என்னைக் கலங்க வைத்து விட்டாயே?” என்றார்.
ஓட்டுநர் அமைதியாக இருந்தார்.
பின்னர் அந்தப் பயணி ஓட்டுநரிடம், “தங்கள் முதுகில் லேசாகத் தட்டியது இவ்வளவு பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை” என்றார்.
உடனே ஓட்டுனர், “இல்லை, இது என்னுடைய தவறுதான். இன்று தான் முதன்முதலாக நான் டாக்சி ஓட்டுகிறேன்”
அதைக் கேட்ட பயணி, “அப்போ, உங்களுக்கு வாகனம் ஓட்டவேத் தெரியாதா?” என்று கேட்டார்.
உடனே ஓட்டுநர், “இல்லையில்லை, நான் கடந்த பத்தாண்டுகளாக ஓட்டுநராகத்தான் இருக்கிறேன். நான் இதற்கு முன்பாக பிணங்களை எடுத்துச் செல்லும் வேனில் ஓடிக் கொண்டிருந்தேன்''
- ஆங்கில இதழ் ஒன்றில் படித்தது