மனைவி கள்ளக் காதலனின் அணைப்பில் இருந்தபோது கணவன் வந்துவிட்டான். அவ்வளவுதான்!
தன் கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து அவளை அந்தக்கணமே சுட்டுக் கொன்று விட்டான்.
வழக்கு விசாரணைக்கு வந்தது.
ஐரோப்பாவில் நடைபெற்ற பிரபல வழக்குகளில் இதுவும் ஒன்றாகியது.
இறுதியில், “இது நியாயமான கொலைதான்! அவன் குற்றவாளியல்ல! அந்த நிலையில் எந்தக் கணவனும் அப்படித்தான் செய்திருப்பான்!” என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
விடுதலையான அவன் இறுமாப்புடன் வெளியே சென்ற போது நீதிபதி அவனை அருகில் அழைத்து இரகசியமாகக் கேட்டார், “எனக்கு ஒரு சந்தேகம் அந்தக் கள்ளக் காதலனைச் சுட்டுக்கொல்லாமல் ஏன் உன் மனைவியைச் சுட்டுக்கொன்றாய்?”
அவன் மீசையை முறுக்கியவாறே பதில் சொன்னான்.
“வாராவாரம் ஒருவனைச் சுட்டுக் கொல்வதற்குப் பதில் ஒரேயடியாக ஒருத்தியைக் சுட்டுக் கொல்வது மேல் என்று நினைத்தேன்!”
- ஆங்கில இதழ் ஒன்றில் படித்தது