ஒரு முறை ஒரு மனிதனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
பல மனைவிகள் இருந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு இருந்தது. ஆனால் அதை நிரூபிக்க எவ்வித ஆதாரமும் இல்லை.
அவரின் வழக்கறிஞர், “நீ அமைதியாக இரு. ஒரு வார்த்தைகூட பேசாதே. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.
அந்த மனிதரும் அப்படியே அமைதியாக இருந்தார். மனத்தின் உள்ளே அமைதியாக இருந்ததால் ஒரு புத்தரைப் போலக் காட்சி தந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, “சாட்சிகள் இல்லாததால் உன்மீதான குற்றச்சாட்டை தள்ளுபடி செய்கிறேன். நீ வீட்டுக்குப் போகலாம்” என்றார்.
அதுவரை அமைதியாக இருந்த அந்த மனிதர், வழக்கு வெற்றியாக முடிந்த மகிழ்ச்சியில், ”நீதிபதி அவர்களே! எந்த வீட்டுக்கு நான் போவது?” என்று கேட்டார்.
- இதழ் ஒன்றில் படித்தது