ஒரு இளம் பெண்ணிற்கு எதிர்பாராத விதமாக மந்திர விளக்கு ஒன்று கிடைத்தது.
அந்த விளக்கைத் தேய்த்ததும், அதிலிருந்து வெளியே வந்த பூதம், “எஜமானி, உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள்?" என்று கேட்டது.
"எனக்குத் தேவையான மூன்று விசயங்களைச் செய்து கொடுக்கனும்" என்றாள் அவள்.
“மன்னிக்கவும். எனக்கு நீங்கள் கேட்கும் ஒன்றை மட்டுமே நிறைவேற்ற முடியும்” என்றது அந்தப் பூதம்.
“அப்படியா?” என்று சொன்ன அவள், உலக வரைபடத்தில் ஒரு இடத்தைக் காட்டி இந்த நாட்டில் அமைதி நிலவிட வேண்டும், அங்கு சண்டை இருக்கக் கூடாது” என்று உலகப் பொது நலத்துடன் ஒரு கேள்வியைக் கேட்டாள்.
“அம்மா, அந்த இடத்தில் ஆயிரம் வருடங்களுக்கும் மேலாகச் சண்டை நடந்து கொண்டிருக்கிறது. அவர்களைச் சமாதானம் செய்து அமைதிக்குக் கொண்டு வருவது மிகவும் கஷ்டம். வேறு ஏதாவதொரு தேவையைச் சொல்லுங்க” என்று கேட்டுக் கொண்டது பூதம்.
உடனே அவள், “சரி, உலக விசயமே வேண்டாம். என் குழந்தைகளை முழுமையாக் கவனித்துக் கொள்ளும்படியான, வீடு வசதின்னு என்னை அன்பா கவனித்துக் கொள்கிற கணவனை எனக்குத் தேடித்தர வேண்டும். முக்கியமாக, அவர் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளைப் பார்க்காமல், என்னுடன் சேர்ந்து, தொலைக்காட்சியிலே மெகா தொடர் பார்க்கக் கூடியவரா இருக்கனும்” என்று கேட்டாள்.
உடனே அந்தப் பூதம், “அம்மா, இது மிகமிகக் கஷ்டம், நான் நீங்க முதலில் கேட்ட கேள்வியையே மறுபடியும் கேளுங்க... அது எந்த நாடுன்னு சொல்லுங்க...!” என்றது.