வெளிநாடு சென்ற சர்தார் கடலில் குளித்து விட்டு, கடற்கரையிலிருந்த குடையின் கீழ் படுத்துக் கிடந்தார்.
வெள்ளைக்காரப் பெண் அவரைக் கடந்து செல்லும் போது "ஆர் யூ ரிலாக்ஸிங்?" என்று கேட்டார்.
அதற்கு அவர், "நோ ...நோ... ஐ ஆம் பாண்டா சிங்" என்றார்.
திரும்பவும் இன்னொரு பெண்னும் அதேக் கேள்வியைக் கேட்க, இந்த இடம் சரிப்பட்டு வராது என்று நினைத்து இடத்தை மாற்றினார்.
அங்கே ஒரு சர்தார்ஜி இருக்க, இவர் தம் இங்கிலீசுப் புலமையை காட்ட அதேக் கேள்வியை அவரிடம் கேட்டார்.
அவர் படித்த சர்தாஜி. அவர் சிரித்துக் கொண்டே "யா... ஐ ஆம் ரிலாக்ஸிங்" என்றார்.
"பொடேர் "என்று அவரை அடித்த சர்தார்ஜி, "நீ இங்க படுத்துக் கிடக்கிறே... அங்க எல்லோரும் உன்னைத் தேடிட்டு என்னிடம் ரிலாக்ஸ்சிங்கான்கு கேட்கிறாங்க... "
- இதழ் ஒன்றில் படித்த சர்தார்ஜி ஜோக்ஸ்