நாம அடிச்சா அது மொட்டை,
அதுவா விழுந்த அது சொட்டை !
*****
'dye" மண்டையில போடுறது,
'die' மண்டைய போடுறது...
*****
தண்ணிக்குள்ள கப்பல் போனா ஜாலி...
கப்பலுக்குள்ள தண்ணி போனா காலி...
*****
லவர்ஸ் டே அன்னிக்கி லவர்ஐ கிஸ் பண்ணலாம்..
ஆனா டீச்சேர்ஸ் டே அன்னிக்கி டீச்சரைக் கிஸ் பண்ண முடியுமா?
*****
யானை மேல நாம உட்கார்ந்த சவாரி
யானை நம்ம மேல உட்கார்ந்த ஒப்பாரி !
*****
காக்கா கா- கானு கத்தறதலா அதை காக்கான்னு கூப்பிடறோம் ...
ஆனா மாடு மா... மானு கத்தறதலா அத மாமான்னு கூப்பிடமுடியுமா?
*****
ரன்னிங் ரேசுல கால் எவ்வளவு வேகமா ஓடினாலும்,
பரிசு கைக்குத்தான் கிடைக்கும் !
*****
க்ரீம் பிஸ்கட்ல க்ரீம் இருக்கும்
நாய் பிஸ்கட்ல நாய் இருக்குமா ?
*****
பிரிட்ஜில் வச்ச சோடா கூல் சோடா ஆகும்,
அதுக்காக அதை வாஷிங் மிஷின்ல வச்சா வாஷிங் சோடா ஆகுமா?
*****
பச்சை மிளகாயில பச்சை இருக்கும்
ஆனா கொடமிளகாயிலக் கொடை இருக்குமா?
*****
சௌத் இந்தியால நார்த்தாங்கய் கிடைக்கும்
ஆனா, நார்த் இந்தியா ல சௌத்தாங்காய் கிடைக்குமா ?
*****
தண்ணீரத் தண்ணின்னு சொல்லலாம்
பன்னீரப் பன்னின்னு சொல்ல முடியுமா?.
- இணையத்தில் படித்தது