சோடா வாங்கிட்டு வாங்க...!
சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்த ஒருவர் திடீரென்று வெயில் கொடுமை தாளாமல் மயங்கிக் கீழே விழுந்து விட்டார்.
அவரைச் சுற்றி பெருங்கூட்டம் சூழ்ந்து நின்றது.
"பாவம், மயக்கம் போலிருக்கு! யாராவது ஓடிப்போய் ஒரு சோடா வாங்கிட்டு வாங்களேன்!" என்றார் ஒருவர்.
"ஆமாம், சோடாவை அவரு வாயில ஊத்தினா மயக்கம் தெளிஞ்சுடும்!" என்றார் வேறொருவர்.
ஆளுக்கு ஆள், மயங்கிக் கிடந்தவரைப் பார்த்து பரிதாபப்பட்டு பேசிக்கொண்டு நின்றிருந்தார்களே தவிர, யாரும் சோடா வாங்கப் போனதாகத் தெரியவில்லை.
சிறிது நேரம் கழிந்தது, ஒருவர் சோடாவுக்காகக் கிளம்பினார்.
அது யார் தெரியுமா? மயங்கிக் கீழே விழுந்து கிடந்தாரே... அவரேதான் எழுந்து போனார்! (அப்படிப்பட்ட உலகம் இது!)
- ஆர். ராஜ்குமார், திருவெறும்பூர்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.