கலைஞரின் நகைச்சுவை
கவிஞர் கண்ணதாசன் தி.மு.க.வில் இருந்த போது, கலைஞர் கருணாநிதி அவரிடம் கேட்டார்.
“இந்த முறை தேர்தலில் எங்கு நிற்கப் போகிறீர்கள்...?”
எந்த தொகுதி கேட்டாலும், ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி மறுத்து விடுகிறீர்கள். நான் இம்முறை தமிழ்நாட்டில் நிற்கப் போவதில்லை... பாண்டிச்சேரியில் நிற்கப்போகிறேன்..!” என்றார் கண்ணதாசன்.
உடனேக் கலைஞர் தனக்கே உரித்தான நகைச்சுவை பாணியில், கவிஞருக்கு இருக்கும் மதுப் பழக்கத்தை மனதில் வைத்துக் கொண்டு, “பாண்டிச்சேரி போனால், உங்களால் நிற்க முடியாதே..!”
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.