ஒருவன் தன்னுடைய வீட்டில் பொய் சொன்னால் கண்டுபிடித்துவிடும் லை டிடெக்டரை வாங்கிக் கொண்டு வந்தான்.
"இது எதற்கு?" என்று அவன் மனைவி கேட்டாள்.
"இது யார் பொய் சொன்னாலும், உடனேக் கண்டுபிடித்துவிடும். நம்முடைய வீட்டுக்கு அவசியம் தேவை" என்று அவன் கூறினான்.
அந்த நேரம் பார்த்து அவனுடைய மகன் வீட்டிற்குத் தாமதமாக வந்தான்.
"எங்கேப் போய் சுற்றிக் கொண்டு வருகிறாய்?” என்று கேட்டார் அப்பா.
அதற்கு மகன், "ப்ரெண்ட் வீட்டுக்கு போய்ட்டு வர்றேன்" என்று கூறினான்.
உடனே அந்த மெசின், ‘பொய்... பொய்...’ என்று கத்தியது.
உடனே அப்பா சந்தோசமாக, பார்த்தியா இந்த மிசின் கண்டுபிடிச்சிருச்சு... “உன்னோட வயசுல நான் பொய்யேச் சொன்னதில்லை” என்று அப்பா பெருமிதமாகக் கூறினார்.
உடனே அந்த மிசின் மறுபடியும், “பொய்... பொய்...” என்று கத்தியது.
அப்பாவிற்கு அவமானமாகப் போய்விட்டது. அதனைப் பார்த்த அவனுடைய மனைவி, "உங்களை மாதிரித்தானே உங்க மகனும் இருப்பான்" என்று கூறினாள்.
உடனே லை டிடெக்டர் சத்தமாக, “பொய்... பொய்...” என்று கத்த ஆரம்பித்துவிட்டது.
அதைக் கேட்டதும் கணவனும், மனைவியும் திருதிருவென விழிக்க ஆரம்பித்தனர்.