காட்டில் ஒரு புலி சிகரெட் பிடித்துக் கொண்டு நின்றிருந்தது.
அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு எலி, "சகோதரா, ஏன் இவ்வாறு சிகரெட் பிடித்து உன் வாழ்க்கையை வீணாக்குகிறாய்... என்னுடன் வா, இந்தக் காடு எவ்வளவு அழகானது என்று காட்டுகிறேன்..." என்று சொன்னது.
அதைக் கேட்ட புலி சிகரெட்டைக் காலில் போட்டு நசுக்கி விட்டு எலியுடன் நடந்தது.
சிறிது தூரம் சென்ற பொழுது அதோ ஒரு யானை உதட்டின் அடியில் 'பான்பராக்' வைத்துக் கொண்டு இருந்தது.
எலி யானையிடம், " சகோதரா நீ ஏன் இப்படி பான்பராக் எல்லாம் உபயோகித்து உன் வாழ்க்கையைச் சீரழிக்கிறாய்... வா இந்தக் காடு எவ்வளவு சுந்தரமானது என்று காட்டுகிறேன்..." என்றது.
அதைக் கேட்ட யானை பான்பராக்கைத் துப்பிவிட்டு எலியுடன் சென்றது.
மூன்று பேரும் நடந்து போகும் பொழுது, அங்கே சிங்க மகாராஜா சாராயம் குடித்துக் கொண்டு நின்றது.
அதைக் கண்ட எலி சிங்கத்திடம், "மகாராஜா, ஏன் இப்படி உங்களை நீங்களே அழித்துக் கொள்கிறீர்கள்... இந்த காட்டின் அழகினை மகாராஜா இதுவரை கண்டதுண்டா... என்னுடன் வாருங்கள் நான் காட்டுகிறேன்..."
அதைக் கேட்ட சிங்கம் எலியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டது.
அதைக் கண்டு பயந்து ஒடுங்கிப் போன புலியும் யானையும் சிங்கத்திடம் கேட்டன.
"மகாராஜா, தாங்கள் ஏன் இந்த சமாதானத் தூதுவனை அடித்தீர்கள்...?"
அப்பொழுது சிங்கம் சொன்னது.
"இந்தப் பரதேசி கஞ்சா அடிச்சிட்டு, இதையேத்தான் சொல்லி நேற்று என்னை இந்தக் காடு முழுவதும் நடக்க வெச்சான்... தினமும் இவனோட தொல்லையாப் போச்சு..."