இரண்டாவது உலகப் போரில் வெற்றி பெற்ற பிறகு பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில், அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட், ரஷ்ய அதிபர் ஸ்டாலின் ஆகிய மூவரும் ஓரிடத்தில் சந்தித்து நேச நாடுகள் பெற்ற வெற்றியைக் குறித்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது... என்னுடைய கனவில் நேற்று கடவுள் வந்து போரில் நேச நாடுகள் பெற்ற வெற்றிக்கு உன்னுடைய ராஜதந்திரம்தான் காரணம் என்று சொன்னதாகச் சர்ச்சில் குறிப்பிட்டார்.
உடனே ரூஸ்வெல்ட் குறுக்கிட்டு, “அப்படியெல்லாம் இருக்க முடியாது. ஏனென்றால் நேற்றுதான் கடவுள் என்னுடைய கனவில் வந்து, அமெரிக்காவிலிருந்து நீ கொடுத்து உதவியப் போர்க்கருவிகள்தான் வெற்றிக்குக் காரணம் என்று என்னிடம் சொன்னார்” என்று குறிப்பிட்டார்.
இரண்டு பேர் பேசியதையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த ஸ்டாலின், “நீங்கள் இருவர் சொல்வதிலும் உண்மை இல்லை. நான் உங்கள் இருவருடைய கனவிலும் வரவில்லையே...” என்றார்.