மகாத்மா காந்தியை பிரிட்டிஷ் நிருபர் ஒருவர் பேட்டி கண்டார்.
காந்திஜியை மட்டம் தட்ட விரும்பிய அவர், “இந்திய மக்களின் சார்பாக ஆங்கிலேயே அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த உங்கள் மக்கள் உங்களை மட்டும் தேர்ந்தெடுக்க என்ன காரணம்? உங்களை விடச் சிறந்த அறிவாளி யாரும் அவர்களுக்குக் கிடைக்கவில்லையா..?” என்று கிண்டலாகக் கேட்டார்.
அதைப் புரிந்து கொண்ட காந்திஜி மெல்லப் புன்னகைத்தபடி, “உங்களது ஆங்கிலேய அரசைச் சமாளிக்க மிகப்பெரிய அறிவாளி தேவையில்லை. என்னைப் போன்ற மிகச் சாமான்யனேப் போதும், என்று என் இந்திய மக்கள் நினைத்திருக்கலாம்...!” என்றார்.
கிண்டல் செய்ய நினைத்தவரின் முகம் கீழேக் கவிழ்ந்தது.