'ஹிட்லரிடம் ஒரு நிருபர், “உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?’’ என்று கேட்டார். ஹிட்லர் அவர் கேள்விக்குப் பதில் கூறாமல் கோட்டை மீது நின்ற வீரனைப் பார்த்து, ”கீழே குதி’’ என்றார்.
அவன் என்ன ஏது என்று கேட்காமல் குதித்தான்.
“பார்! இதுதான் என் வெற்றியின் ரகசியம்’’ என்றார் ஹிட்லர் கர்வமாக.
நிருபர் விடாமல், “படைவீரர் குதித்தார் சரி, ஒரு பெரிய அதிகாரி குதிப்பாரா?’’ என்றார்.
உடனே ஹிட்லர் ஒரு கர்னலுக்குக் கட்டளையிட்டார். அவரும் குதிக்க முயல, நிருபர் ஓடிப் போய் தடுத்து நிறுத்தி அவரிடம், “என்ன சார், நீங்களுமா?’’ என்று கேட்டார்.
கர்னல் வெறுப்புடன், “அடப் போய்யா, இவரிடம் வேலை செய்வதைவிடக் குதித்துச் சாவதே மேல்’’ என்றார்.