ஒரு நாள் பாட்டி தன் பேரனின் வற்புறுத்தலுக்காகவும், பக்கத்து வீட்டுக்காரர்கள் நகைச்சுவை மிகுந்த படம் என்றதாலும், பேரனுடன் திரைப்படம் பார்க்கச் சென்றார்.
படம் தொடங்கியது. ஒவ்வொரு காட்சியிலும் அரங்கம் சிரிப்பில் அதிர்ந்தது.
மக்கள் கரவொலியுடன் ரசித்தனர்.
பாட்டியும் உரக்கச் சிரிப்பதை ராமன் கண்டான்.
ஒரு கட்டத்தில் சிரிப்பு ஓய்ந்து அரங்கம் அமைதியாயிற்று.
இப்போது காரணமே இல்லாமல் பாட்டி இரண்டாவது முறை சிரித்தாள்.
சிறிது நேரத்திற்குப் பிறகு மூன்றாவது முறையாகப் பாட்டி சிரித்தாள்.
அரங்கம் பாட்டியைத் திரும்பிப் பார்த்தது.
ராமனுக்குக் காரணம் புரியவில்லை. மூன்று முறை சிரித்ததற்கான காரணத்தைப் பாட்டியிடம் கேட்டான்.
பாட்டி சொன்னாள்: ''முதல் தடவை எல்லோரும் சிரித்ததால் நானும் சிரித்தேன். கொஞ்சம் யோசித்த பிறகு, அந்த நகைச்சுவை புரிந்ததால் இரண்டாம் முறை சிரித்தேன். இதைப் புரிந்து கொள்ள இவ்வளவு நேரமாயிற்றே என்று நினைத்து மூன்றாவது முறை சிரித்தேன்''