ஆப்பிரிக்க மக்கள் வெள்ளையரிடம் தங்கள் நாட்டை எப்படி இழந்தார்கள் தெரியுமா?
ஆப்பிரிக்கத் தலைவர் ஒருவர் கூறினார்: வெள்ளையர்கள் ஆப்ரிக்காவிற்கு மதப் பிரச்சாரம் செய்யத்தான் வந்தார்கள். அப்போது அவர்கள் கையில் பைபிள் இருந்தது. எங்களிடம் எங்கள் நிலங்கள் இருந்தன. ‘பிரார்த்தனை செய்வது எப்படி?’ என்று உங்களுக்குக் கற்றுக் கொடுக்கிறோம், கண்ணை மூடுங்கள்” என்றார்கள்.
‘அதை நம்பி பிரார்த்தனை செய்தோம். கண் திறந்து பார்த்தபோது அவர்களது பைபிள் எங்கள் கைகளிலும் எங்கள் நிலங்கள் அவர்கள் கையிலுமாக மாறியிருந்தது’ என்றார்.
(ஜே. சி. குமரப்பா என்பவர் சொன்னது)