கர்சான் பிரபு ஒருமுறை கல்கத்தாவில் ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது, ஒருவன் ஒரு துண்டு சீட்டினை அவரிடம் கொடுத்தான்.
அவர் அதைப் பிரித்தால் 'இடியட்' என்று எழுதியிருந்தது.
கர்சான் பிரபு சிறிதும் கோபம் கொள்ளாமல், ''பொதுவாக, இது போன்ற கூட்டங்களில் கலந்து கொள்பவர்கள் ஏதேனும் விளக்கம் பெற விரும்பினால், கேள்வியை எழுதி, தங்களின் பெயரைக் கீழே எழுதுவார்கள். இங்கிருக்கும் ஒருவர் விளக்கம் பெற வேண்டிய கேள்வியை எழுத மறந்துவிட்டு, தனது பெயரை மட்டும் குறிப்பிட்டு அனுப்பி உள்ளார். அவரின் பெயர் இடியட்'' என்று கூறினார்.
கர்சான் பிரபுவின் பதிலைக் கேட்டு அனைவரும் உரக்கக் கையொலி எழுப்பினர்.