பெல்ஜியம் நாட்டில் புகழ்பெற்ற எழுத்தாளர் மேட்டர்லிங்க். அவருக்கு, தான் எழுதிக்கொண்டிருக்கும்போது யாராவது குறுக்கே பேசினால் கோபம் வரும்.
ஒருமுறை அவர் தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கும் சமயத்தில் வீட்டிற்குத் திரும்பிய அவர் மனைவி சப்தம் செய்யாமல் தன் அறைக்குச் சென்றார்.
அங்கே அதிர்ச்சி அடைந்த அவர் ஓடி வந்து கணவனிடம், ''யாரோ என் நகைகளைத் திருடிக் கொண்டு போய் விட்டார்களே!'' என்று அலறினாள்.
''ஒரு திருடன் என் வேலைக்குக் காட்டும் மரியாதையைக் கூட உனக்குக் காட்டத் தெரிவில்லையே!'' என்று பதிலுக்குக் கத்தினார் மேட்டர்லிங்க்.