சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் ஏ.எஸ்.பி.ஐயர். அவர் தெய்வநம்பிக்கை மிக்கவர்.
ஒரு சமயம் நாத்திகச் சங்கம் ஒன்றில் அவரைப் பேச அழைத்தார்கள்.
ஐயர் பேசத் தொடங்கியதும் ஒருவர் எழுந்து, ‘‘எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை’’ என்று பெருமிதத்துடன் கூறினார்.
உடனே ஐயர், ‘‘அதனால் கடவுளுக்கோ, ஆத்திகர்களுக்கோ நஷ்டம் இல்லை’’ என்றார்.
ஐயரை மடக்க எண்ணிய நாத்திகர் மறுபடியும் எழுந்து, ‘‘என் கண்களுக்குத் தெரியாத எதையும் நான் நம்ப மாட்டேன்’’ என்றார்.
உடனே ஐயர், ‘‘அப்பா, உன் மண்டைக்குள் இருக்கும் மூளை என் கண்களுக்குத் தெரியவில்லை. ஆகையால் உனக்கு மூளை இல்லை என எடுத்துக் கொள்வதா?’’ என்றார்.
நாத்திகர் வெட்கிப் போனார்.