பெண் கதாசிரியர் ஒருவர் ஒரு பத்திரிகையாசிரியருக்கு இவ்வாறு எழுதினார்:
‘‘சார்! நீங்கள் நான் அனுப்பும் கதைகளைச் சரிவரப் படிக்கிறீர்களா என்று தெரிந்து கொள்ள, சென்ற வாரம் நான் அனுப்பிய கதையில் சில பக்கங்களை ஒட்டி வைத்து அனுப்பினேன். அவை அப்படியே திரும்ப வந்துவிட்டன. அதனால் நீங்கள் அவற்றைப் படிப்பதில்லை என்பது தெரிகிறது.’’
அதனைப் படித்த ஆசிரியர் இவ்வாறு பதில் எழுதினார்:
‘‘அம்மா, காலை உணவுக்காக இன்று ஒரு முட்டையை உடைத்தேன். அதைப் பார்த்ததும் அது அழுகியது என்று தெரிந்தது. அது நன்றாக இல்லை என்று தெரிந்து கொள்ள அதை முழுவதுமாக நான் சாப்பிட வேண்டுமா?’’