தீபாவளி சிரிப்புகள்!
தேனி.எஸ். மாரியப்பன்.
ஒருத்தி: உன் மாமியார் இறந்ததற்கு ஒரு வார்த்தை கூட பேசாம அழுது புலம்பாம இடிஞ்சு போய் உட்கார்ந்துட்டியே... உன் மாமியார் மேல் அவ்வளவு பாசமா?
மற்றவள்: அட நீ வேற... தலை தீபாவளிக்கு ஒரு மாசம் இருக்கிறப்ப செத்துட்டாங்களே... இந்த வருசம் பட்டுப் புடவை, பண்டிகை எல்லாம் போச்சேங்கிற துக்கம் தொண்டையை அடைச்சிட்டுது...!
*****
ஒருவர்: தலை தீபாவளிக்கு வர்ற உங்க மாப்பிள்ளை என்ன கேட்டிருக்கிறார்?
மற்றவர்: அவருக்கு ஒரு வரவேற்பு பேனர் வைக்கணுமாம்.
*****
ஒருத்தி: இந்த வருஷம் தீபாவளிக்கு ரெண்டு பட்டுப்புடவை எடுத்திருக்கிறாயே எதுக்கு...?
மற்றவள்: போன தீபாவளிக்கு என் மாமியார் இறந்தாங்களே... அதையும் கொண்டாடத்தான்.
*****
டாக்டர்: தீபாவளி பலகாரம் எதுவும் நீங்க சாப்பிடக் கூடாது.
வந்தவர்: அப்புறம் வேற என்ன பண்றது டாக்டர்...?
டாக்டர்: பார்சல் பண்ணி என்னிடம் கொண்டு வந்து கொடுத்திடுங்க...
*****
மந்திரி: மன்னா...! தீபாவளிக்கு நீங்க பட்டாசு வெடிச்சதை மக்கள் பெருமையாப் பேசிக்கிறாங்க...!
மன்னர்: உங்களுக்கு தீபாவளி இனாம் ஐந்தாயிரம் வழங்க உத்தரவிடுகிறேன்...!
*****
பிச்சைக்காரன்: இந்த வருடம் தீபாவளிப் பலகாரம் ஒன்றும் நல்லாயில்லம்மா...!
பெண்:என்னப்பா... எங்க வீட்டிலிருந்து உனக்கு இன்னும் ஒன்றுமே கொடுக்கலையே...
பிச்சைக்காரன்: உங்க வீட்டில இருக்கிறவங்க எல்லோரும் என்கிட்ட சொல்லிட்டாங்கம்மா...!
*****
ஒருவர்: தீபாவளிக்கு நாலு பட்டுப்புடவைகள் எடுத்தேன்னு சொல்றீங்களே...! மனைவிக்கும் மகள்களுக்குமா?
மற்றவர்: இல்லீங்க... மனைவிகளுக்கும், மகளுக்கும்...!
*****
ஒருத்தி: தீபாவளிக்கு எடுத்த ஜாக்கெட்டை ஏன் போடாமல் வைத்திருக்கிறாய்?
மற்றவள்: அவசரத்தில் டெய்லர் ஜாக்கெட்டுக்குப் பாக்கெட் வைத்திட்டாருடி...!
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.