அவனுக்கு சுத்தமா படிப்பு வரலீங்க...!
குரு. சுப்பிரமணியன்
ஒருவன்: இராத்திரி எப்போ வரும்னு தினம் எதிர்பார்க்கிறது வழக்கமாப் போச்சு...!
மற்றவன்: கல்யாணமான புதுசில்லையா, கொஞ்ச நாள் அப்படித்தான் இருக்கும்.
ஒருவன்: சீசீ, அதுக்கில்லை மெகாசீரியல் பார்க்கத்தான்.
*****
ஒருவன்: ஆனாலும் என் காதலி ரொம்ப மோசம்.
மற்றவன்: ஏன்?
ஒருவன்: ரகசியமா யாருக்கும் தெரியாமே ஓடிப் போயிடலாம்னு சொன்னதுக்கு, கட்டின புருஷனோடவே வந்துட்டா!"
*****
ஒருவன்: அந்த நடிகை ஏன் ஒரு சூப்பர் மார்க்கெட் கட்டி வாடகைக்கு விட்டிருக்காங்க?
மற்றவன்: ஏன்?
ஒருவன்: அவங்களுக்கு மார்க்கெட்டே இல்லைன்னு யாரும் சொல்லிடக் கூடாதுன்னுதான்."
*****
ஒருவன்: உங்க பையனை அரசியலுக்குக் கொண்டு வரணும்னு சொல்றீங்களே, அவனுக்கு அதுக்கு என்ன தகுதி இருக்கு?
மற்றவன்: அவனுக்கு சுத்தமா படிப்பு வரலீங்க...
*****
ஒருவன்: ஆனாலும் இந்த டிராபிக் கான்ஸ்டபிள் ரொம்ப மோசம்.
மற்றவன்: ஏன்?
ஒருவன்: தெருவிலே அவசரமா நடந்து போறவங்களைக்கூட ஓவர்ஸ்பீடுக்கு புக் பண்றாரே!"
*****
ஒருவன்: நம்ம ஜனங்ககிட்டே படிக்கற பழக்கமே ரொம்ப குறைஞ்சிட்டுதே, என்ன காரணம்?
மற்றவன்: ஏன்?
ஒருவன்: படிக்க ஓசியிலே புஸ்தகம் தர்றவங்க ரொம்ப குறைஞ்சுட்டதினாலேதான்."
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.