எப்படிச் சொல்றே?
குரு. சுப்பிரமணியன்
ஒருவன்: என் கணவரை மேனேஜர் சீட்லே பயப்படாமே உக்கார வச்சது எங்க குடும்ப டாக்டர்தான்
மற்றவன்: எப்படிச் சொல்றே?
ஒருவன்: அவர்தானே மூலத்திற்கு ஆபரேஷன் பண்ணி வியாதியைக் குணப்படுத்தினார்.
*****
ஒருவன்: இந்த டாக்டருக்கு ரொம்பவும்தான் ஞாபகமறதி...!
மற்றவன்: எப்படிச் சொல்றே?
ஒருவன்: ஆபரேஷன் பண்ணிக்க வந்த நோயாளியை போஸ்ட் மார்ட்டம் பண்ணிட்டாரோ!
*****
ஒருவன்: போலீஸ் ஸ்டேஷன் திறப்பு விழாவுக்கு மட்டும் அந்த அரசியல்வாதி போக மாட்டாரு
மற்றவன்: எப்படிச் சொல்றே?
ஒருவன்: அங்கே அவர் போட்டோ ஒட்டியிருப்பாங்களோன்னு பயத்திலாலேதான்
*****
ஒருவன்: இளவரசருக்குப் பட்டம் சூட்ட மன்னர் தயங்கறார்ன்னு நினைக்கிறேன்
மற்றவன்: எப்படிச் சொல்றே?
ஒருவன்: அவர்தான் டிகிரி வாங்கலையே...
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.