பேராசிரியரின் அடக்கச் செலவு!
ஒரு கல்லூரிப் பேராசிரியர் வறுமையில் வாடி மரணம் அடைந்தார். அவருக்குத் தெரிந்தவர்கள் சவ அடக்கத்திற்குப் பணம் திரட்டினார்கள்.
அவர்கள் ஒரு பணக்காரரைச் சந்தித்து அவர்கள் வந்த செய்தியைச் சொன்னார்கள். அவர் எவ்வளவு தேவைப்படும் என்று கேட்டார்.
ஐந்தாயிரம் ரூபாய் ஆகும் என்று ஒருவர் தயங்கியபடி கூறினார்.
உடனே அந்தப் பணக்காரர் பதினைந்தாயிரம் ரூபாய்க்குச் செக் எழுதிக் கொடுத்தார்.
வந்தவர்கள் திகைத்துப் போனார்கள்.
அப்போது அந்தப் பணக்காரர், "இதைக் கொண்டு போய் மூன்று பேராசியர்களை அடக்கம் செய்யுங்கள்" என்றார்.
- தேனி. எஸ். மாரியப்பன்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.