தொட்டில் எதுக்கு?
குரு.சுப்ரமணியன்
ஒருவன்: அந்த ஆளு ரொம்ப அப்பாவியா இருக்காரே.
மற்றவன்: எப்படி சொல்றே?
ஒருவன்: பேப்பர் மசாலாவுக்கு வருட சந்தா கட்ட முடியுமான்னு கேக்கறாரு!!
*****
ஒருவன்: மணப்பெண் சீர்களோட ஒரு தொட்டிலும் வந்திருக்கே... பின்னாடி அவளுக்குப் பிறக்கப் போற குழந்தைக்கா?
மற்றவன்: இல்லை, அவளே ஒரு குழந்தை மாதிரின்னு அவங்க அப்பா-அம்மா சொல்றாங்களாம்.!
*****
ஒருவன்: எங்க வீட்டுக்கு வந்திருந்த திருடன் ரொம்ப பொறுப்புள்ளவனா இருப்பான் போலிருக்கு.
மற்றவன்: எதை வச்சு சொல்றே?
ஒருவன்: போலீஸ்கிட்டே நாங்க காமிக்க என்னென்ன அயிட்டம்கள் திருடியிருக்கான்னு ஒரு லிஸ்ட் எழுதி வச்சிட்டுப் போயிருக்கான்னா பார்த்துக்கோயேன்.
*****
ஒருத்தி: வேலைக்காரி ஏன் ரொம்ப நேரமா தொட்டிலை ஆட்டிகிட்டே இருக்கா?
மற்றவள்: ஒரு வேளை குழந்தையைக் கிள்ளி விட்டிருப்பாளோ?
*****
ஒருவன்: நீங்க எடுக்கறது குடும்ப சண்டைப் படம்னு சொல்றீங்களே...?
மற்றவன்: ஆமாம்.!அப்பா, அம்மா, பிள்ளைங்க பொண்ணுங்க எல்லாரும் ஒருத்தரோட ஒருத்தர் சண்டை போட்டுக்கறதா கதையை அமைச்சிருக்கோம்.!
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.