ஓட்டல் வாசலில் கழுதைகள்!
குரு.சுப்ரமணியன்
ஒருவன்: இந்த வக்கீல் ஏன் கோர்ட்டுக்கு டார்ச் லைட் எடுத்துகிட்டுப் போறாரு?
மற்றவன்: சட்டம் ஒரு இருட்டறையாச்சே, அதனாலேதான்
*****
ஒருவன்: பீச்லே கடலை விக்கற பையன் ஏன் சோகமா இருக்கான்?
மற்றவன்: இங்கே வர்றவங்க அவங்களே கடலை போட்டுக்கறாங்களேன்னுதான்.
*****
ஒருவன்: ஆனாலும் அந்த டாக்டர் ரொம்ப அநியாயம் பண்றாரு?
மற்றவன்: என்ன செஞ்சாரு?
ஒருவன்: திருடின கிட்னிக்களை வச்சு ஒரு கிட்னி பாங்க் ஆரம்பிச்சுட்டாரே.
*****
ஒருத்தி: எங்க இருபததைந்தாவது மணநாளுக்கு ராப்பிச்சை ஒரு பரிசு அனுப்பியிருக்கான்
மற்றவள்: என்ன அது?
ஒருத்தி: ருசியாக சமைப்பதெப்படிங்கற புஸ்தகம்தான்.
*****
ஒருவன்: என்ன கல்யாணப் பெண்ணோட கழுத்து, காது, கையிலேயெல்லாம் பூவைச் சுத்தி அனுப்பியிருக்காங்க?
மற்றவன்: பொன்னு வைக்கற இடத்திலே பூ வச்சாப் போதும்னு சம்பந்திங்க சொல்லி இருந்தாங்களாம்.
*****
ஒருவன்: அந்த ஹோட்டல் வாசலிலே ஏன் அத்தனை கழுதைங்க நிக்குது?
மற்றவன்: அங்கே பேப்பர் மசாலா சூப்பரா இருக்குமாம்.
*****
ஒருவன்: உங்க படத்தை நான் இருபது தடவை பார்த்தேன், தெரியுமா?
மற்றவன்: அடே! அவ்வளவு பிரமாதமாயிருந்ததா?
ஒருவன்: இல்லை. எத்தனை தடவை பார்த்தலும் கதையே புரியலியே.
*****
ஒருவன்: நீதிபதியை நடன நிகழ்ச்சிக்கு ஜட்ஜாப் போட்டது தப்பாப் போச்சு.
மற்றவன்: ஏன்?
ஒருவன்: மேஜையிலே 'ஆர்டர், ஆர்டர்'னு தட்டறத்துக்கு மரச்சுத்தி கேக்கறாரு.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.